"என் புள்ளைய யாராவது கடத்தியிருந்தால்.. கோயில்ல கொண்டு வந்துவிடுங்க!" செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "என் மகளை யாராவது கடத்திச் சென்றிருந்தால் கொண்டு வந்து எங்களிடம் விட்டுவிடுங்கள்" என செஞ்சி சிறுமி ஹேமலதாவின் தாய் பவானி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். செஞ்சி சிறுமி காணாமல் போய் 42 நாட்களாகியும் அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல்- பவானி! இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன. மூத்த மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் ஹேமலதா அங்குள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

gingee hemalatha

7 வயதாகும் சிறுமி ஹேமலதாவுக்கு கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தநாள்! இதனால் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. குடும்பத்தினர் கேக் வெட்டி குழந்தைக்கு பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இரவு தூங்கினர். அதிகாலையில் பவானி எழுந்து பார்த்த போது குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.

காணாமல் போன சிறுமி

கழிப்பறைக்குச் சென்று பார்த்தார், அங்கும் சிறுமியை காணவில்லை. இந்த நிலையில் சத்தியமங்கலம் போலீஸாரிடம் பவானி தம்பதி புகார் கொடுத்தனர். அதன்பேரில் அங்குள்ள நீர் நிலைகள், கரும்பு காடுகள், விவசாய நிலங்களில் எல்லாம் சிறுமியை தேடி பார்த்தனர். டிரோன் கொண்டு பல்வேறு பாறை இடுக்குகளிலும் தேடியதில் சிறுமி கிடைக்கவில்லை.

சிபிசிஐடி விசாரணை

இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டோர் ஆலம்பூண்டி கிராமத்திலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனினும் சிறுமி காணாமல் போய் 42 நாட்களாகியும் இதுவரை துப்பு கிடைக்கவில்லை. சிபிசிஐடி போலீஸார் 30 நாட்களாக விசாரணை நடத்தியும் ஒரு சிறிய க்ளூ கூட கிடைக்கவில்லை. சிறுமி உயிருடன் இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

கரூர், நாமக்கல்லில் சிறுமி

குழந்தையை கரூர், நாமக்கல்லில் பார்த்ததாக சிலர் கூறிய தகவல்களின்படி அங்கும் சிபிசிஐடி போலீஸார் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. சிறுமி காணாமல் போன அன்று விடிய விடிய செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்குள்ள சாம்பலை போலீஸார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

எதிர்வீட்டு உறவினரிடம் விசாரணை

அது போல் சிறுமியின் வீட்டு எதிர்வீட்டில் இருக்கும் மஞ்சுளாவின் உறவினர் ரேணு என்பவரிடமும் விசாரணை நடைபெற்றது. இவர் கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருகிறார். இப்படி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். தாய் பவானி, பாட்டி சாந்தி, தந்தை வடிவேல், மூத்த மகள், அவருக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டார் என நிறைய முறை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது.

42 நாளாச்சு

இந்த சூழலில் சிறுமியின் தாய் பவானி அழுது கொண்டே பேசிய ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகள் மாயமாகி இன்றுடன் 42 நாட்களாகிவிட்டது. அவள் சாப்பிட்டாளா? என்ன செய்கிறாள்? என தெரிவில்லை. மகள் குறித்து எந்த தகவலும் தெரியாமல் நாங்கள் பசியோடும் பட்டினியோடும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணீர் விட்ட பவானி

எனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள். எனது மகளை யாராவது கடத்திச் சென்று இருந்தால் அவர்களிடம் நான் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். எனது மகளை என்னிடமே கொண்டு வந்து ஒப்படைத்துவிடுங்கள். என்னிடம் கொடுக்க முடியாவிட்டாலும் ஏதாவது ஒரு கோயிலிலாவது கொண்டு வந்து ஒப்படைத்துவிடுங்கள். அங்கிருப்பவர்கள் எங்கள் மகளை ஒப்படைப்பார்கள். இவ்வாறு அந்த தாய் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+