தி நகர் பனகல் பார்க் வரை மெட்ரோ சேவை எப்போது?, மாதவரம் -சோழிங்கநல்லூர் தடத்திலும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரயில் சேவைகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மெட்ரோ ரயில்கள் தியாகராய நகர் பனகல் பார்க் வரை ஓடத்தொடங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல் கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

Chennai metro Panagal Park T Nagar

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை காரிடர் 5 ஆக (சிவப்பு வழித்தடம்) அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் மாதவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வருகிறது. ஒட்டுமொத்தமா 48 நிலையங்கள் அமைக்கப்பட்டுகிறது.

மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரை

மறுபுறம் சென்னை மெட்ரோ காரிடர் 3 (ஊதா நிற வழித்தடம்) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரை மிகநீளமாக செல்லும் வழித்தடமாக அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 50 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 45.8 கி.மீ.நீளமுள்ள ஊதா நிற வழித்தடத்தில் மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம வழியாக சோழிங்கநல்லூரை அடைகிறது.


பூந்தமல்லி பைப்பாஸ் முதல் மெரினா கடற்கரை

அதேபோல் தான் காரிட்ர நான்கு வழித்தடம் மஞ்சள் வழித்தடமாக அமைக்கப்பட்டு வருகிறது. இது பூந்தமல்லி பைப்பாஸ் முதல் மெரினா கடற்கரையான லைட் ஹவுஸ் வரை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பூந்தமல்லி பைப்பாஸ் முதல் வடபழனி வரை தற்போது ரயில்கள் ஓடுகின்றன. இதில் போரூர் முதல் வடபழனி இடையே உள்ள ரயில் நிலையங்களில் பணிகள் இன்னும் முடியாத காரணத்தால், போரூர் மற்றும் வடபழனிஇடையே இடையில்லா ரயிலாக ஓடுகிறது. அந்த பகுதிகளில் வளரசவாக்கம், ஆலப்பாக்கம், விருகம்பாக்கம் ரயில் நிலையங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக வடபழனியில் இருந்து தி.நகர் பனகல் பூங்கா வரை ரயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


பனகல் பூங்கா வரை ரயில் சேவை நீட்டிப்பு

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வடபழனி - தி.நகர் பனகல் பூங்கா வரையிலான பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு ஜூலையில் ரயில் சேவையை நீட்டிக்கத் திட்டமிட்டு வருகிறது. இரு மார்க்கமாக மொத்தம் 8 கி.மீ தொலைவு கொண்ட இப்பாதையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், கோடம்பாக்கம் மற்றும் பனகல் பூங்கா ஆகிய நிலையங்கள் அமைகின்றன. தற்போது வரை தலா இரண்டேகால் கி.மீ. தொலைவுக்குத் தண்டவாளப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. முதற்கட்டமாக ஆற்காடு சாலையில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும்.இதில் பனகல் பூங்கா நிலையத்தில் 6 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் அமைக்கப்படுகின்றன.

கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது

மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு - ஆலந்தூர் பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உள்ள ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.

இதனிடையே பூந்தமல்லி புறவழிச்சாலை - போரூர் சந்திப்பு வழியாக வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், நாளை (நவ. 24) முதல் காலை நேர மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்காலிகமாக நேர மாற்றம்

சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த மாதம் தொடங்கியது. இந்த பகுதியில் உள்ள 7 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை அமைய உள்ள 7 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இவ்வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 6 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்கும். போரூர் சந்திப்பு முதல் வடபழனி இடையேயான பகுதியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கத்துக்கு தானியங்கி சிக்னல் அமைப்பு சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள இந்த கூடுதல் நேர அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. போரூர்-வடபழனி இடையிலான மீதமுள்ள நிலையங்களை விரைவில் திறந்து பொதுமக்களின் பயணத்தை மேலும் எளிதாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+