லாரியை மறித்து மாமூல் கேட்ட நபர்.. பீகார் டிரைவர் செய்த காரியம்.. வைரல் வீடியோ
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியை வழிமறித்து மாமூல் கேட்ட நபருக்கு, டிரைவர் கொடுத்த பதில்தான் இப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரியின் முன்பக்கத்தில் தொங்கியபடியே சுமார் 100 கி.மீ. தூரம் சென்றுள்ளார் அந்த நபர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, சோஷியல் முடியாவிலும் பரவி வருகிறது... அப்படி என்ன நடந்தது?
நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகளை ஓட்டி செல்வதென்றாலே, அது கடினமான வேலை என்பது பலருக்குமே தெரியும்.. ஒரு இடத்தில் பொருட்களை ஏற்றி, பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவற்றை உரிய இடத்தில் சேர்க்க வேண்டியிருக்கிறது..

லாரி டிரைவரிடம் மாமூல்
இதனிடையே, வழியில் சிலர் லாரிகளை மறித்து பணம் கேட்டு மிரட்டுவதும் லாரி டிரைவர்களுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் - மேற்கு வங்க எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வெள்ளை கலர் டீ-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் அந்த லாரியை வழிமறித்துள்ளார்.
டிரைவரிடம் கெத்தாக வந்து மாமூல் கேட்டுள்ளார்.. ஆனால் டிரைவர், அவருக்கு மாமூல் கொடுக்க மறுத்துள்ளார். லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச்செல்ல முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், லாரியைத் தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளார். உடனே லாரியின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டுக் கம்பியை பிடித்தபடி தொங்கியுள்ளார்.
100 கி.மீ பயணம்
ஆனால் அந்த நபர் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்தும் டிரைவர் கண்டுக்கவே இல்லை.. தொடர்ந்து லாரியை ஓட்டிக்கொண்டேயிருந்தார்.. இதனால் லாரியின் முன்பக்கத்தில் தொங்கியபடியே அந்த நபரும் தொங்கிக்கொண்டே வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது.. டிரைவர் லாரியை ஒருகட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று அந்நபர் நினைத்தார்.
ஆனால், சுமார் 100 கி.மீ. தூரம் வரைக்கும், இப்படியே லாரியை ஓட்டி சென்றாராம் டிரைவர்.. அந்த நபரும், கீழே இறங்க முடியாமல் பீதியில், லாரியிலேயே தொங்கிக்கொண்டே வந்துள்ளார்.. . லாரியின் முன்பக்கத்தில் ஒருவர் தொங்கிக்கொண்டிருப்பதும், டிரைவர் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் செல்வதும் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
இந்த சம்பவத்தை லாரிக்குள் இருந்த இன்னொரு நபர் வீடியோ எடுத்து விட்டார்.. அதுமட்டுமல்ல, லாரி சென்று கொண்டிருக்கும்போதே டிரைவருக்கும், வெளியே தொங்கிய நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் டிரைவர், அங்கிருந்த கம்பு எடுத்து, அந்நபரை தாக்க முயன்றார்.. உடனே அந்த நபரும், லாரியின் கண்ணாடி வழியாக டிரைவரை தாக்கவும் மிரட்டவும் முயன்றுள்ளார்..
ஒரு பக்கம் லாரி சென்று கொண்டிருக்கிறது. மறுபக்கம் டிரைவருக்கும் வெளியே தொங்கிய நபருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது... இவ்வளவு பரபரப்பும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது..
ஆதரவும் - எதிர்ப்பும்
இந்த வீடியோவை பார்ப்பதற்கே சினிமா சண்டைக்காட்சியை பார்ப்பது போல இருந்ததாம். இந்த வீடியோ இணையத்தில் பரவியதுமே. விறுவிறுவென வைரலாகி விட்டது.. லாரி டிரைவர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டும் நபர்களுக்கு இதுபோன்ற எதிர்ப்பு தேவை, இதுதான் சரியான படிப்பினை என்று கமெண்ட்டுகளை டிரைவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்..
ஆனால் மேலும் சிலர் இதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.. லாரியின் முன்பக்கத்தில் ஒருவர் தொங்கிக்கொண்டிருக்கும்போது வாகனத்தை எப்படி செல்லலாம்? இது உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்குமே? டிரைவர் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டாமல், இப்படி சண்டையில் ஈடுபட்டால் மற்ற வாகனங்களும் ஆபத்தில் சிக்குமே? லாரி ஓட்டுநர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்தான், அதே நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைச் சட்டப்படி கையாள்வதுதான் பாதுகாப்பானது என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
