திண்டிவனம் அருகே வேன் மீது பஸ் மோதி பயங்கர விபத்து - 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடித்து பலி!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திண்டிவனம் அருகே கன்னிகாபுரத்தில் சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களது வேன் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.

Tindivanam devotees accident

பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 2 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 13 பக்தர்கள் படுகாயமடைந்தனர். இந்த ஐயப்ப பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 13 பேரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திண்டிவனம் போலீசார், தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+