விஜயகாந்த் வீட்டு திருமணத்தில், தேவயானி கோபமாக வெளியேறிய காரணம் இதுதானா? மேடையில் நடந்த சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மைத்துனர் சுதேஷின் மூத்த மகள் ஜானு ஸ்ரீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை தேவயானி தனது 2 மகள்களுடன் கலந்து கொண்ட போது திடீரென மேடையில் இருந்து கோபமாக கத்திக்கொண்டு வெளியேறிய வீடியோ சோசியல் மீடியாவில் 2 நாட்களாக வைரலாகி வருகிறது. தேவயானி எதற்காக இப்படி நடந்து கொண்டார்? என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில் இது பற்றிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தேமுதிக சுதீஷ் மகள் திருமணம்

அனிருத் காவியா வரவேற்பு நிகழ்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே, கேப்டன் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினருமான ஏல்.கே. சுதிஷ் மகள் ஜானு ஸ்ரீயின் திருமணமும் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து இருக்கின்றனர். அதில் நடிகை தேவயானியும் தனது இரண்டு மகள்களுடன் வந்திருந்தார்.

Vijayakanth Devayani DMDK Sudheesh

தேவயானிக்கு நடந்த அவமானம்

அப்போது மேடையில் மணமக்களை வாழ்த்துவதற்காகவும், அவர்களிடம் புகைப்படம் எடுப்பதற்காக தேவயானி தனது மகள்களுடன் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததால் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. அந்த சமயத்தில் எதிர் திசையில் வந்த தேவயானியை கவனிக்காமல் புதுச்சேரியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தேவயானியை தடுத்து நிறுத்தி ஓரமாக நிற்க சொல்லியிருக்கிறார்.

கோபப்பட்ட தேவயானி

இதனால் கடுப்பான தேவயானி நான் எதற்காக இங்கே நிற்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமான தேவயானி மேடையில் இருந்து மகள்களை கூட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார். அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு அருகில் வந்திருக்கிறார். அப்போது மேலும் கூட்டம் அதிகமானதால் வழி விடுங்க என்று சொல்லியப்படியே தேவயானி நடந்து வந்திருக்கிறார்.

நடந்த சம்பவம்

அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின், "சாரி" என்பது போல சைகை காட்ட, அதை கண்டு கொள்ளாமல் தேவயானி நடந்து வந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த சில நெட்டிசன்கள் உதயநிதி ஸ்டாலினால் தான் தேவயானி கோபப்பட்டு வெளியே வந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் மேடைக்கு வருவதற்கு முன்பே தேவயானி மேடையில் இருந்து கோபமாக கீழே இறங்கி இருக்கிறார் என்பது இப்போது கிடைத்திருக்கும் தகவல்.

ஆனால் அங்கு என்ன நடந்தது? என்பதை பற்றி திருமண வீட்டாரோ, அல்லது நடிகை தேவயானியோ இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. அவர்களே முழுமையாக விளக்கம் கொடுத்தால் தான் இது பற்றிய உண்மையான தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் தகவல் படி பார்க்கும்போது தேவயானி மேடையை விட்டு இறங்கிய பிறகு தான் உதயநிதி ஸ்டாலின் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதுதான்.

முன்னேற்பாடுகள் வேண்டும்

ஆனாலும் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர்களை வரவேற்பதற்கும், கூட்டத்தை சரி செய்வதற்கும் சரியான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது. திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தேவயானிக்கும் அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவை இல்லாத சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்கு சந்தோஷமாக போனவர்களுக்கு அங்கு ஏற்பட்ட மனக்கசப்பு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ச்சியை நடத்திய திருமண வீட்டாருக்கே அந்த சமயத்தில் தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+