விஜய பிரபாகரனின் ரியாக்ஷனை வைத்து வரும் விமர்சனம்.‌. இது தேவையா? வருத்தத்தில் விஜயகாந்த் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக எம்எல்ஏவும் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் மகள் ஜானு ஸ்ரீயின் திருமணமும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் 2 நாட்களாக சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. ஆனால் இந்த திருமணத்தில் மணமக்களை விட விஜயகாந்த் குடும்பத்தினரின் வீடியோக்களை தான் இப்போ சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த் பட்டுப்புடவை அணிந்து திருமண வரவேற்புக்கு ஏற்ற வகையில் அழகாக அலங்காரம் செய்து வந்திருந்தார். ஒரு பெரிய குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை என அந்த இடமே பார்ப்பது பரபரப்பாக இருந்தது. ஆனால் பிரேமலதாவின் அலங்காரத்தை பார்த்த சிலர் இந்த வயதில் இவ்வளவு மேக்கப் தேவையா? என்று விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Premalatha Vijayakanth Vijay Prabhakaran DMDK Sudhish

பிரேமலதா பற்றி விமர்சனம்

ஒரு திருமண வரவேற்புக்கு வரும்போது பட்டுப் புடவை அணிவது, நகைகள் போட்டுக் கொண்டு தங்களுக்கு பிடித்த மாதிரி அலங்காரம் செய்து கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் திருமண வீட்டில் முன்னின்று கவனிக்கும் ஒருவர் நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி தன்னை அலங்கரித்துக் கொள்வது வழக்கமான விஷயம் தானே? வயதை வைத்து ஒருவருடைய உடை, மேக்கப்பை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வியும் எழுகிறது.

Premalatha Vijayakanth Vijay Prabhakaran DMDK Sudhish

விஜய பிரபாகரன் பற்றி ட்ரோல்

இதற்கிடையே விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் பற்றியும் அதிகமான மீம்ஸ் வைரலாகி வருகிறது. திருமண நிகழ்ச்சியில் அவர் வணக்கம் சொல்வது, கண்ணாடியை கழட்டி கழட்டி மாட்டுவது, கீழே இருந்தவர்களுக்கு கை காட்டுவது என அவருடைய செயலை சிலர் கிண்டல் செய்கின்றனர். அதிலும் அவருடைய உடல் மொழியை வைத்து பெண் தன்மை அதிகமாக இருக்கிறது என்று அவருடைய கேரக்டரையும் சிலர் விமர்சித்து பதிவிட்டு வருவதை பார்த்து விஜயகாந்த் ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Premalatha Vijayakanth Vijay Prabhakaran DMDK Sudhish

தவறான விஷயம்

ஒருவருடைய உடல் மொழி அல்லது இயல்பான செயல்பாடுகளை வைத்து அவரை இப்படி எல்லாம் கேலி செய்ய வேண்டுமா? விஜயகாந்த் குடும்பம் அரசியல் குடும்பம் என்பதால் அவர்கள் பொது நிகழ்ச்சியில் வரும்போது கேமராக்கள் அவர்களை படம் பிடிப்பது இயல்புதான். அதேபோல் அவர்களுடைய அரசியல் செயல்பாடுகள், பொது கருத்துக்கள், மக்கள் பணிகள் என எது வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு திருமண வீட்டில் அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? யாருக்கு எப்படி வணக்கம் வைக்கிறார்கள்? என்ன மேக்கப் போட்டு இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் வைத்து தொடர்ச்சியான ட்ரோல் செய்வது வேறு விஷயம்.

Premalatha Vijayakanth Vijay Prabhakaran DMDK Sudhish

இதெல்லாம் தேவையா?

பிரேமலதா மேக்கப் போட்டால் அதுவும் விமர்சனம், போடவில்லை என்றாலும் அதுவும் விமர்சனம். விஜய பிரபாகரன் அமைதியாக இருந்தால் ஆணவம் என்று சொல்வது, சிரித்தால் அது வேறு விதமாக மீம் போடுவது என எதற்கெடுத்தாலும் ஒரு கேலி தயாராக இருக்கிறது. ஒரு திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் இருந்த காலத்தில் அவருடைய குடும்பத்தை நேசித்த ரசிகர்கள் இன்றும் அந்த குடும்பத்தின் மீது பாசம் வைத்திருக்கிறார்கள். ஆனால் சிலர் விஜயகாந்த் மனைவி மற்றும் மகனை இதுபோல மோசமாக விமர்சிப்பது தவறான விஷயம். மீம்ஸ் போடுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக தோற்றத்தையும், உடல் மொழியையும் தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டியது அவசியம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+