6 தொகுதி இடைத்தேர்தல்.. தவெக ரகசிய சர்வே.. விஜய் உச்சக்கட்ட டென்ஷன்
சென்னை: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விரைவில் திருச்சி கிழக்கு, கொளத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தல் குறித்து தவெக தலைமை ரகசிய சர்வே எடுக்க தொடங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

6 தொகுதி இடைத்தேர்தல்
இதில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. வி.எஸ். பாபு மரணத்தால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியாகியுள்ளது. அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவற்றுடன் கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக மீண்டும் திட்டமிடுவதாக தவெக புகார் சொல்லியுள்ளது. தவெக ஆட்சி நீடிக்காது. சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.
தவெக வியூகம்
தேர்தலில் தவெகவை தோற்கடித்து, ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடுகிறார்கள். விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் சீமான் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் குறித்து இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட வருகின்றன.
திமுக, அதிமுக மறைமுக கூட்டணியில் தேர்தலைச் சந்திக்க திட்டமிடுவதாக தவெக குற்றம் சாட்டுகிறது. வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனர். ஆளுங்கட்சியான தவெக தங்கள் சாதக, பாதகங்களை ஆராயத் தொடங்கியுள்ளது. விலைவாசி உயர்வு, தவெக நிர்வாகிகள் செயல்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ரகசிய சர்வே
மக்கள் மீண்டும் தவெகவுக்கு வாக்களிப்பார்களா, கள நிலவரம் என்ன என்பதை ரகசிய சர்வே எடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், திமுக, அதிமுக அண்டர் ஸ்டேண்டிங் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், கொளத்தூர் நிலவரம் என்ன என்பதை சர்வேயாக எடுத்து வருகிறார்கள். பெண்களிடம் அதிக சர்வே எடுக்கவுள்ளனர். சர்வேயை பொறுத்து தவெக தேர்தல் வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொள்வார்கள் என்று பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
