அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு.. மொத்தமாக சொதப்பிய டெல்டா ஏர்லைன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உட்பட அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகியிருக்கின்றன.

விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் அதன் எடை மற்றும் சமநிலையை சரியாக கணக்கிட வேண்டும். அப்போதுதான் அந்த விமானத்தை சரியாக மேலே பறக்க வைக்கவும், தரையிறங்க வைக்கவும் முடியும். இதற்காக தானியங்கி அமைப்புகள் இருக்கின்றன. இப்படியான அமைப்பில்தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

US flight

டெல்டா நிறுவனத்தின் தானியங்கி எடை மற்றும் சமநிலை கணக்கீடு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால், ஊழியர்கள் ஒவ்வொரு விமானத்திற்கும் கைமுறையாக கணக்கிட வேண்டி இருந்தது. இதனால் அட்லாண்டாவிலிருந்து விமானங்கள் புறப்படுவதில் அதிக நேரம் எடுத்தது. இந்த பிரச்சனை காரணமாக, மற்ற விமானங்கள் அங்கிருந்து வெளியேறாமல் நின்று இருந்ததால்.. பிற நகரங்களில் இருந்து அட்லாண்டாவுக்கு வந்து சேரும் டெல்டா விமானங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் போனது.

எனவே இதை சமாளிக்க, விமான நிலைய ஓடு பாதைகளையும், விமானங்கள் காத்திருப்பதையும், நெரிசலையும் தவிர்ப்பதற்காக பிற விமான நிலையங்களில் இருந்து டெல்டா விமானங்கள் அட்லாண்டா நோக்கி புறப்படுவதை அமெரிக்கா மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தடுத்த நிறுத்தியது.

இதனால் சுமார் 3500க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. அமெரிக்க நேரப்படி காலை 11 மணி நிலவரப்படி, உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் விமான நிலையத்தில், 681 விமானங்களும் நாடு முழுவதும் 591 டெல்டா விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாகின.

தற்போது இந்த தானியங்கி அமைப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரை விமானங்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு ஊழியர்கள் கைமுறை நடைமுறைகளை பயன்படுத்தி வருவதாகவும் டெல்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‌ நவம்பர் 19 முதல் டிசம்பர் 1 வரையிலான விடுமுறை காலத்தில்.. சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் அட்லாண்ட் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். இப்படி இருக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெல்டா விமானங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+