சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை! தலைநகரில் சட்டென மாறிய வானிலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக தாம்பரம், பம்மல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மழை தொடங்கியிருப்பது மக்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறது. இன்றும், நாளையும் சென்னையில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
