கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.. இந்து விரோத ஜோசப் விஜய்! இந்து முன்னணி கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜோசப் விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்வது, அவரது தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து திமுக, விசிக, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து வெளியிட்டன.

அந்த கட்சிகள் இந்து விரோதிகள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அவர்கள் ஆட்சி செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பை மதிக்காமல் சர்வாதிகார ஆட்சி செய்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். இதனால் மக்களின் நம்பிக்கையை இழந்து ஆட்சியை இழந்தனர்.

Hindu Munnani Vijay Thiruparankundram

இந்து முன்னணி

இவர்கள் ஆட்டிவித்ததால் ஆடிய அரசு அதிகாரிகள் சட்டத்தின் முன்பு தலை குனிந்து நின்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். பாமக சௌமியா அன்புமணி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பலர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, நீண்ட நாள் கோரிக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று வரவேற்றனர்.

ஜோசப் விஜய்

ஆனால் தவெக கட்சித் தலைவர்கள் மற்றும் அதன் தலைவரான ஜோசப் விஜய் ஆகியோர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. நேற்று சட்டத்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்கள் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார். இதே நிர்மல் குமார் தேர்தலின்போது திருப்பரங்குன்றத்தில் வேட்பாளராக தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீபம் ஏற்றும் விஷயத்தில் சட்டப்படி நடந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று பேசினார்.

உச்ச நீதிமன்றம்

ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜோசப் விஜய் அவரை செயல்படுத்த வைப்பது முருக பக்தர்கள் இழைக்கும் துரோகம் ஆகும். காவிரி நீர் சம்மந்தமான உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உடனே செயல்பட்டு தடுத்து தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க செயல்படவில்லை. ஆனால் இந்துக்களின் உரிமையை தடுக்க மட்டும் துடிக்கிறார் என்றால் அது அவருக்கு உள்ளே ஊறியிருக்கும் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக அரசு

கெட்டிக்காரன் பொய் நாடகம் எட்டு நாளைக்கு என்பது பழமொழி. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதங்களுக்கும் நாங்கள் பொதுவானவர்கள். எல்லா மதமும் நம் மதம் என்று சினிமா வசம் போல் எழுதி கொடுத்ததை பொதுக்கூட்டத்தில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். இந்து விரோத திமுக அரசு திருப்பரங்குன்றம் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தந்த தெளிவான தீர்ப்பை எதிர்த்து செய்த அப்பீலை தொடர வைத்தார். அப்போதே இவரது நம்மதம் வேடம் கலைந்தது.

தவெக

இப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு செய்ததன் மூலம் இவரது அப்பட்டமான இந்து விரோத எண்ணம் வெளிப்பட்டு உள்ளது. ஆனால் முஸ்லிம் பயங்கரவாத குற்றவாளிகளுக்கு நீண்ட நாள் பரலோல் விடுதலை செய்தார். அதுமுதல் தனது ஆட்சியை தக்க வைக்க எதுவும் செய்வார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. முருகனின் அருளால் இந்த தீய எண்ணம் கொண்ட தவெகவின் எண்ணம் பலிக்காது. இந்து முன்னணி இந்த நயவஞ்சக்கூட்டத்தை எதிர்த்து

முருக பக்தர்கள்

சட்டம் மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை துணிந்து நடத்துவோம். நமது கோவிலில் நாம் தீபம் ஏற்ற எத்தனை தடைகள். எத்தனை போராட்டங்கள். எத்தனை உயிர் தியாகங்கள். எந்த விலை கொடுத்தும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான நாம் நமது உரிமையை மீட்டெடுப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆர்த்தெழுந்து போராட வாருங்கள் என்று இந்து முன்னனி சார்பில் அறைகூவல் விடுகிறோம்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+