பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது! புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு! FSSAI போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் வெளியில் செல்லும்போது தாகம் எடுத்தால், பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி உடனடியாக வாங்குவது பிஸ்லெரி போன்ற பாட்டில் குடிநீரைத்தான். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் குடிநீர், மனிதர்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

water bisleri

ஆய்வக சோதனையில் நடந்தது என்ன?

பிஸ்லெரி பாட்டில் மீதான சோதனைக்கு பின்பே இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள், பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து பாட்டில் குடிநீர் மாதிரியைச் சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.

அந்த முதல் கட்ட ஆய்வக சோதனையில், அந்தத் தண்ணீரில் புரோமேட் எனப்படும் ரசாயனத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், 2006-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் அந்தத் தண்ணீர் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இந்த முதல் சோதனை முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், அந்தத் தண்ணீர் மாதிரி மீண்டும் வேறொரு உயர்மட்ட உணவு ஆய்வகத்திற்கு மறுபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டாவது சோதனையிலும் பிஸ்லெரி தண்ணீருக்குப் தோல்வியே ஏற்பட்டது.

இரண்டாவது ஆய்வில், அந்தத் தண்ணீரில் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் எனப்படும் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, இரண்டாவது ஆய்வகமும் இந்தத் தண்ணீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று உறுதி செய்தது.

இந்த ரசாயனங்களால் என்ன ஆபத்து?

ஆய்வக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய இரண்டுமே புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட ரசாயனங்கள் ஆகும். தண்ணீரைச் சுத்திகரிக்கும் சில முறைகளின் போது புரோமேட் உருவாக வாய்ப்புள்ளது.

இவை குடிநீரில் கலந்திருப்பது பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும். இதை குடிப்பதால் நாளுக்கு நாள்.. உடலில் இந்த ரசாயனத்தின் அளவு அதிகரித்து பின்னர் பல வகையான கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதாலேயே, உணவு பாதுகாப்பு ஆணையம் பிஸ்லெரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர உத்தரவிட்டுள்ளது.

கடைகளில் உள்ள பாட்டில்களுக்குத் தடையா?

இந்தச் செய்தி வெளியானதும், கடைகளில் விற்கப்படும் அனைத்து பிஸ்லெரி பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மாதிரியின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த பேட்ச் தண்ணீர் அல்லது எந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் இது என்ற விவரத்தை உணவு பாதுகாப்பு ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஸ்லெரி பாட்டில்களையும் திரும்பப் பெறுமாறு ஆணையம் இதுவரை உத்தரவிடவில்லை. இந்த விவகாரம் குறித்து பிஸ்லெரி நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மற்ற நிறுவனங்கள் மீதும் பாய்ந்த நடவடிக்கை

பிஸ்லெரி மட்டுமின்றி, உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய வேறு சில நிறுவனங்கள் மீதும் FSSAI கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களைத் தயாரித்ததற்காக வசந்த் மசாலா, டிட்-பிட் ஃபுட்ஸ், மிமான்சா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆஷா கன்ஃபெக்ஷனரி ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆஷா கன்ஃபெக்ஷனரி நிறுவனம் தயாரித்த சாக்லேட் பிஸ்கட்டுகள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டதால், அவற்றைச் சந்தையில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+