சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்பதா? இதுதான் நாகரீக அரசியல் மரபா? தவெக ஐடி விங் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்கு தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று பேசுவது தான் நாகரீக அரசியல் மரபா? என தமிழக வெற்றிக்கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் குடியரசு இதழின் முழு தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இதலின் முழு தொகுப்பை வெளியிட்டனர்.

TVK IT Wing Udhayanidhi Stalin

அந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள்என்று கூறுவதா? என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்பாக அக்கட்சியின் ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில்," மாண்பும் மரபும் மிகுந்த நம் தமிழக சட்டமன்றத்தைக் 'கேடுகெட்ட சட்டமன்றம்' என்று முன்பு சொன்னதும் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று இப்போது சொல்வதும்தான் சட்டமன்ற மாண்பும் மரபும் குறித்துப் பேசும் கும்பலின் நாகரிக அரசியல் மரபா? நல் அரசியல் மாண்பா?.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று சொல்லும் ரீபோஸ்ட்நிதியும் இப்போது இதே சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர்தானே? அவருக்கு அது மறந்துவிட்டதா? அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது?.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிகு பொறுப்பில் இருந்துகொண்டு, ஆபாசச் சொற்களையும் அநாகரிகச் சொற்களையும் உதிர்ப்பதுதான் இந்த அரசியல் போலி தங்கள் கட்சித் தலைமையிடம் கற்ற பாடமா?.2016 வரை அறிஞரும் சான்றோரும் அறிவுலகம் அறிந்தோருமாகக் காத்திரமானக் கருத்தியல் பேசியோரும் மற்றும் மக்களைப் புரிந்தோரும் என மதிப்பிற்குரியோர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போது உளறல்நிதிகளிடமும் ஒப்பாரிநிதிகளிடமும் ஆபாசநிதிகளிடமும் வன்மநிதிகளிடமும் வக்கிரநிதிகளிடமும் சிக்கிக்கொண்டதைக் கண்டு தமிழக அரசியல் களம் வெட்கித் தலைகுனிகிறது.

மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, அவர்தம் அன்பைப் பெற்று மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவரின் மாசற்ற மக்கள் செல்வாக்கு கண்டு பொறாமையில், ஆற்றாமையில், ஆத்திரத்தில், இயலாமையில் பொங்கும் அரசியல் போலிகளும் புலம்பல் பொட்டலங்களும் இனியாவது அவமரியாதைப் பேச்சுகளையும் அவதூறுப் பரப்புரைகளையும் ஆபாசப் புலம்பல்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களே நிறுத்த வைப்பர்." என கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+