ஸ்டாலின் சொல்கிற மாதிரி தவெக ஆட்சி கவிழாது.. இடைத்தேர்தல்களில் சிபிஎம் நிலைப்பாடு என்ன? பெ சண்முகம் பதில்
சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்வதை போல 6 மாதம் அல்ல, அடுத்த சில மாதங்களில் கவிழ்வதற்கு வாய்ப்பு கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார். மேலும் வரும் இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்பது குறித்த கேள்விக்கும் அவ பதிலளித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கிறது என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகிறது. மேலும் தவெக ஆட்சி விரைவில் கவிழும், 6 மாதங்கள் கூட தாங்காது என்றும் கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியும் விஜய்க்கு ஆட்சி நிர்வாகம் தெரியவில்லை. செய்தியாளர்களை சந்திக்கவே பயப்படுகிறார். செய்தியாளர்களை சந்தித்தால் தானே மக்கள் பிரச்சினை தெரியவரும். எனவே இந்த ஆட்சி தானாக கவிழும் என கூறி வருகிறார். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலினும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என பேசினார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாலர் பெ சண்முக இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை
திமுக தலைவர், முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் சும்மா சும்மா இந்த ஆட்சி ஒரு மாதம் கூட தாங்காது.. மூன்று மாதம் கூட தாங்காது.. இப்போது ஆறு மாதம் கூட தாங்காது என சொல்லி வருகிறார். 6 மாதத்தை கடந்த இப்போது இந்த ஆட்சி நடந்து வருகிறது. எனவே இவர்கள் தோல்வியடைந்துள்ளதால், தங்களுடைய ஆசையை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என, ஆட்சிக்குக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லா முயற்சியையும் எடுப்பார்கள். ஆகவே மு.க ஸ்டாலின் சொல்வதை போல 6 மாதம் அல்ல, அடுத்த சில மாதங்களில் கவிழ்வதற்கு வாய்ப்பு கிடையாது. தவெகவினர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.. என்று கூறினார்.
இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன?
அப்போது செய்தியாளர்கள் அடுத்து நடக்க உள்ள இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பெ சண்முகம், "இடைத்தேர்தல் சம்பந்தமாக இன்னும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அடுத்து நடக்கக் கூடிய எங்களுடைய மாநிலக் குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து என்ன மாதிரியான அனுகுமுறையில் ஈடுபட வேண்டும் என்பதை முடிவு செய்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
