இயக்க கட்டமைப்பை வலுப்படுத்திய தனுஷ்.. வசூலில் வாரி குவிக்கும் ஓம்.. அடுத்து அரசியல் என்ட்ரி உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் தனது ரசிகர் இயக்க கட்டமைப்பை வலுப்படுத்தியதன் வெளிப்பாடாக, அவரின் ஓம் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஓம் படத்திற்கான முன் பதிவிலேயே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதால், தனுஷ் உற்சாகத்தில் இருக்கிறார். இதனால் அரசியல் என்ட்ரிக்கு ரசிகர்களை தயார் செய்ய மும்முரமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஓம் திரைப்படம் 2 நாட்களில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. ஓம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பால், தனுஷ் உற்சாகம் அடைந்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களிலும் கூட தனுஷ்க்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

Dhanush

தனுஷின் 24 ஆண்டு வருட சினிமா வாழ்க்கையில் இப்படியொரு வரவேற்பை எந்தப் படம் பெற்றதில்லை. இதற்கான காரணம் தனுஷ் செய்து வரும் ரசிகர் மன்ற கட்டமைப்பு மாற்றம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஓம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக மட்டுமே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளன.

ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோருக்கு பின் இவ்வளவு அதிக டிக்கெட்டுகள் புக் ஆவது தனுஷ் படத்திற்கு தான். இதனால் ரசிகர்களை அரசியலுக்கு தயார்படுத்துவது சினிமாவுக்கு நல்ல பலன் கொடுப்பதாக தனுஷ் புரிந்து கொண்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரசிகர் மன்ற கட்டமைப்பை தனுஷ் வலுப்படுத்தி வருகிறார்.

குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், பெண்களுக்கு பட்டுப் புடவை, புகைப்படம் எடுக்க வந்தவர்களுக்கு பிரியாணி விருந்து என்று தனுஷ் தனது நற்பணி இயக்கத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார். அண்மையில் மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு வெள்ளி குத்து விளக்கு பரிசாக கொடுத்து இருந்தார்.

இதன் காரணமாக தனுஷ் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளின் முன் வைக்கப்பட்ட பேனர்களில் நிர்வாகிகளுடன் சேர்த்து மகளிரணிக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு காட்சிக்கு பெண் ரசிகைகளும் படம் பார்க்க வந்திருந்தனர். இதனால் தனுஷ் தரப்பு ரசிகர்களை அரசியலுக்கு தயார் செய்யும் பணிகளில் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+