பெங்களூர் பங்களாவிற்குள் நுழைய கூடாது.. ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளாவிற்கு கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தங்கை ஷர்மிளாவுக்குவுக்கும் இடையே பெங்களூர் எலகங்காவில் உள்ள பங்களா தொடர்பாக சொத்து பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் எலகங்கா பங்களாவில் நுழைய ஷர்மிளாவிற்கு தடை விதித்து பெங்களூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

bengaluru-court-restrainings-ys-sharmilafrom-ennetring-the-disputedyelahanka-palace-ahead-of-her-dau

ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் ஜெகன் மோகன்ரெட்டி. இவரது தங்கை ஷர்மிளா ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவர்கள் 2 பேரும் பேசிக்கொள்வது கிடையாது.

இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பான விவகாரம் சமீபத்தில் பூதாகரமானது. ஷர்மிளாவின் மகள் அஞ்சலி ரெட்டிக்கும், சோமாலா ரகுரமி ரெட்டி என்பவருக்கும் நவம்பர் 25ம் தேதிபெங்களூர் எலகங்கா பங்களாவில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பங்களா
பெங்களூரு எலகங்கா கட்டிகேனஹள்ளியில் அமைந்துள்ளது. ஜெகன் மோகன்ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான இந்த பங்களா இன்னும் பிரிக்கப்படவில்லை. கூட்டு குடும்ப சொத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி - ஷர்மிளா இடையேயான சொத்து பிரச்சனையால் இந்த பங்களாவை ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா ஆகியோர் குடும்ப நிகழ்ச்சி நடத்த பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனால் ஷர்மிளா தனது மகள் திருமணத்தை எலகங்கா பங்களாவில் நடத்த முடிவு செய்தார். பத்திரிகைகளும் அச்சிட்டு வழங்கினார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி வழங்கவில்லை. பங்களாவில் தற்போது தான் வசித்து வருவதால் இங்கு திருமணம் நடத்துவது தனக்கு இடையூறாக இருக்கும் எனவும், இப்போது பங்களாவை தனது மாமியார் பெயரில் உள்ளது எனக்கூறி எனக்கூறி அனுமதி மறுத்தார். ஆனால் ஷர்மிளா ஏற்கவில்லை.

திருமண தேதி (நவம்பர் 25) நெருங்கி வருவதால் ஷர்மிளா தனது குடும்பத்துடன் எலகங்கா பங்களாவிற்கு நுழைய தயாரானார். இந்நிலையில் தான் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமியார் சுகுணம்மாவிடம் பங்களாவை குத்தகை அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வரும் தனியார் நிறுவனம் சார்பில் பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த பங்களாவிற்கு செலுத்தப்படும் குத்தகை பணம், மின்கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டு பங்களா தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர்.

அதோடு ஒய்எஸ் ஷர்மிளா மற்றும் அவரது தரப்பில் வருகை தருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷர்மிளா மற்றும் அவரது குடும்பத்தினர் அல்லது அவர்களின் சார்பில் யாரும் எலகங்கா பங்களாவிற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அந்த பங்களாவை சுற்றிலும் இரும்பு தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன்மூலம் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி - தங்கை ஒய்எஸ் ஷர்மிளா இடையேயான சொத்து பிரச்சனை இன்னும் பூதாகரமாகி உள்ளது.

முன்னதாக இந்த சொத்து பிரச்சனைக்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணம் தான்.
ஜெகன் மோகன் ரெட்டி - ஒய்எஸ் ஷர்மிளாவின் தந்தை பெயர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர். ஹெலிகாப்டர் விபத்தில் அவர் பலியானார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது குடும்ப சொத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் ஷர்மிளா ஆகியோருக்கு சரிபாதியாக வழங்க முடிவெடுத்தார்.

இதனால் ஹைதராபாத், இடுபுலபாயா (சொந்த ஊர்) மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ் ஷர்மிளா ஆகியோருக்கு அருகருகே சொகுசு வீடுகள் கட்டி கொடுத்திருந்தார். பெங்களூரில் உள்ள எலகங்காவில் 20 ஏக்கரில் எதிரெதிரே 2 பங்களாக்கள்உள்ளன. இதில் ஒன்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு. இன்னொன்று ஓய்எஸ் ஷர்மிளாவிற்காக தந்தை ராஜசேகர ரெட்டி கட்டினார்.

இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரிலான பங்களா மட்டுமே அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டது. ஒய்எஸ் ஷர்மிளா பெயரில் அந்த பங்களா பதிவு செய்யவில்லை. ராஜசேகர ரெட்டி பெங்களூர் செல்லும்போது இங்கு தங்கி வந்தார். தந்தை ராஜசேகர ரெட்டி மறைந்த பிறகு ஜெகன் மோகன் ரெட்டி பெங்களூர் பேலஸில் ஒய்எஸ் ஷர்மிளாவிற்கு பங்கு கொடுக்க மறுப்பதோடு, இந்த பங்களா அவரது மாமியார் பெயரில் உள்ளது. தற்போது அங்கு வைத்து தனது மகளின் திருமணத்தை நடத்த ஒய்எஸ் ஷர்மிளா திட்டமிட்டுள்ள நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+