கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக? நொடியும் யோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரு மாதங்களாக மருத்துவமனையில் இருந்த விஎஸ் பாபு கடந்த நவம்பர் 19ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கொளத்தூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kolathur By-Election Edappadi Palaniswami AIADMK

கொளத்தூர் இடைத்தேர்தல்

இதற்கிடையே அவரது மறைவை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதில் யாரெல்லாம் போட்டியிடுவார்கள்.. திமுக தரப்பில் யார் வேட்பாளராக இருப்பார்கள் என பல்வேறு யுகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே கொளத்தூர் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

அதிமுக நிலைப்பாடு

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "வரட்டும் சார், இடைத்தேர்தல் வரும்போது நீங்கள் கேளுங்கள். நாங்கள் சொல்கிறோம். இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளேயே விமர்சனம் வேண்டாம். இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர், அது எந்தக் கட்சியாக இருந்தாலும் உயிரிழந்தது என்பது வருத்தத்துக்குரியது. இடைத்தேர்தல் வந்தால் உரிய நேரத்தில் நாங்கள் முடிவெடுப்போம்" என்றார்.

காவிரி நீர்

இதற்கிடையே காவிரி நீர் பங்கீடு விவகாரம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதுப தொடர்பாக அவர், ""அங்க எவ்வளவு மழை பெய்யுது, எவ்வளவு நீர் அணைக்கு வருது, அதன் தகவலை தான் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த உத்தரவைக்கூட இவர்களால் அமல்படுத்த முடியலையே! நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதங்களை எடுத்து வைத்து நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதாந்திர வாரியாக பெற முடியாத ஒரு அரசு, கையாலாகாத அரசு தான் தமிழக வெற்றிக் கழக அரசு. இதனால் டெல்டா மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி வாழும் விவசாய தொழிலாளிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

விஎஸ் பாபு

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏவாக இருந்த வி.எஸ். பாபு (75), உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 19ம் தேதி காலமானார். கடந்த 2026 தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட இவர், யாருமே எதிர்பார்க்காத வகையில் வென்று மாநிலம் முழுவதும் கவனம் பெற்றார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் சுவாச கோளாறு காரணமாக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுமார் 72 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+