திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! உளுந்தூர்பேட்டைக்கு போனால் போக்குவரத்து மாற்றமாம்! ஜாக்கிரதை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் எதிரொலியாக உளுந்தூர்பேட்டையில் 3 முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள மகா கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவம்பர் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Karthigai Deepam

இதனால் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பக்தர்களின் வாகனங்களைத் தவிர்த்து, கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை மேம்பாலம், சேலம் ரவுண்டானா மற்றும் எலவனாசூர்கோட்டை - ஆசனூர் சாலை ஆகிய மூன்று முக்கிய இடங்களில் திருப்பி விடப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் மற்றும் தருமபுரி வழியாகச் செல்லும் வகையில் மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று முக்கிய இடங்களிலும் தற்காலிகப் பந்தல்கள் அமைக்கப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் வாகனப் போக்குவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து, வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் பயணம் தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசனாஸ் தலைமையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+