எடப்பாடி பழனிசாமி முதல்வராக உதவியவர் எஸ்பி வேலுமணி.. அதைகூட மறந்துவிட்டார்.. செங்கோட்டையன் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை: மன்னிப்பு, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடிக்காது என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்பி வேலுமணி.. அந்த உதவியை மறந்துவிட்டு தற்போது எடப்பாடி பேசி கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

அதிமுகவில் இருக்கும் 2 கோடி தொண்டர்களில் எஸ்பி வேலுமணியும் ஒருவர் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இதற்கு பதிலடியாக எஸ்பி வேலுமணி, தொண்டர்களால் பொதுச்செயலாளர் ஆனவர், அவர்களின் குரலை கேட்பதில்லை என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையிலான மோதல் எழுந்துள்ளது.

Sengottaiyan

இதனிடையே பொள்ளாச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து எஸ்பி வேலுமணி ஆலோசனை நடத்தி இருந்தார். அது எதேச்சையான சந்திப்பு என்றாலும், எஸ்பி வேலுமணி அதிருப்தியில் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக செங்கோட்டையன் குரல் கொடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ஞானத்தை எதிர்த்து போரிட முடியும்.. காலத்தை எதிர்த்து போரிட முடியாது.. காலம் வைக்கின்ற புள்ளியை உன்னால் அழிக்க இயலாது. எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும் நிகழ்வு இதுதான்.. ஒவ்வொரு நபராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி வருகிறார்.

எந்தவொரு தலைமை மன்னிக்கும் தன்மையோ, பெருந்தன்மையோ இல்லையோ அது நீடித்து நிலைத்து நின்ற வரலாறு இல்லை. அந்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்பி வேலுமணி.. அந்த உதவியை மறந்துவிட்டு தற்போது எடப்பாடி பேசி கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சியில் எஸ்பி வேலுமணியை சந்தித்தது எதேச்சையாக நடந்தது. இருவருக்கும் அவர் நெருக்கமானவர். என்னுடன் அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இருந்தனர். பொதுவான கருத்துக்களை தான் பேசினோம் என்று தெரிவித்தார். எஸ்பி வேலுமணியுடன் செங்கோட்டையன் நெருக்கம் காட்டி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+