சீனாவால் வானத்திலிருந்து வரும் ஆபத்து! ஒரே நிமிஷத்தில்.. மொத்தமும் காலியாக போகுது! புது சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: எந்த ஒரு இலக்கையும் சில விநாடிகளில் தாக்கக்கூடிய விண்வெளி தாக்குதல் தளத்தை சீனா உருவாக்கி வருவதாகவும், அதன் ரகசிய விண்வெளி விமானமான ஷென்லாங் புகைப்படத்தில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை 130 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது சீனாவின் மர்ம விண்வெளி விமானத்தின் புகைப்படம் தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

China

அமெரிக்காவின் வாண்டார் என்ற விண்வெளி உளவு நிறுவனத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சீனாவின் சென்லாங் என கருதப்படும் டெல்டா-விங் விண்வெளி விமானத்தின் கதவுகள் திறந்த நிலையில், அதன் பின்பகுதியில் ஒரு செயற்கைக்கோள் இணைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இது மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை அழிப்பதற்காக டிசைன் செய்யப்பட்ட ஆயுதமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பு, பூமியில் உள்ள எந்த இலக்கை வேண்டுமானாலும் தாக்க முடியும். தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதிகபட்சம் 150 வினாடிகளுக்குள் இந்த விண்வெளி விமானம்.. தனது சுற்றுப்பாதையில் இருந்து விலகி, இலக்கை நோக்கி இறங்கத் தொடங்கும். உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில்.. வெறும் ஒரு நிமிடம் நேரத்தில், இது தாக்குதலை நடத்தும் என்று சொல்லப்படுகிறது. சீனாவின் நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை தெரிவித்து இருக்கிறார்கள்.

வழக்கமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை போல இல்லாமல்.. விண்வெளியில் இருந்தே, திடீரென திசையை மாற்றி தாக்கும் திறன் கொண்ட இந்த விண்வெளி விமானங்களை கண்காணிப்பதும் பாதியில் தடுத்து அழிப்பதும் மிகவும் கடினமானது. எதிரி நாடுகள் ரியாக்ட் செய்வதற்கு முன்பு தாக்குதலை நடத்தி விடும். குறிப்பாக அமெரிக்கா உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் சவாலாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் மிகவும் பேமஸான எண்டேவர் விண்கலம் போன்ற அமைப்பை இது கொண்டிருக்கும். அதாவது ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு.. நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி விட்டு பின்னர் சாதாரண விமானத்தை போல விமான ஓடுபாதையில் தரை இறங்கும். இப்படியான விண்வெளி ஆயுதத்தை சீனா பயன்படுத்த தொடங்கிவிட்டது எனில்.. மொத்த உலகத்திற்கும் சிக்கல்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+