சிம்ம ராசியினருக்கு 75% நன்மைகள்.. பணவரவு அதிகரிக்குமா?.. எதில் கவனம் தேவை?
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். அஷ்டமத்தில் இருக்கும் சனிக்கு ராகுவின் வீரியம் இருப்பதால் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் தேவையில்லாத குழப்பங்கள், அவப்பெயர் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
கவனம்
ரத்தத்தில் பரவும் நோய் பாதிப்புகளில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றத்தில் அதீத கவனத்துடன் செயல்படுவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பில் கவனமில்லாமல் இருந்தால் உடனிர்ப்பவர்களாலேயே பிரச்சனைகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
மகம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. அலர்ஜி, தலைவலி, இடதுபுற பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்குப் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்கிற எண்ணம் தோன்றும். யாரிடமும் சரியாகப் பேசக்கூட மனது வராத மனநிலைமை இருக்கும். மனம் இறுக்கமாக இருக்கும்.
பாதிப்புகள்
வீட்டின் இடதுபுறம் இருக்கும் ராமர், சீதா, லட்சுமணன், அனுமனை மனதார வழிபாடு செய்வது சகலவித நன்மையைத் தரும். 5 ஆம் தேதி முதல் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். 4 ஆம் இடத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் நிலம், வீடு, அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பாதிப்புகள் வரக்கூடும். மூலப் பத்திரங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.
வழிபாடு
அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்கள் ஒருமாதிரி இருக்கக்கூடிய சூழல் ஏற்படும். எந்த விஷயத்தையும் வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்திலோ, காதல் அமைப்பிலோ சிக்கல்கள் காணப்பட்டால் அதனை பேசி தீர்த்து அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது நன்மை பயக்கும். துர்க்கை வழிபாடு, ஹயக்ரீவர் வழிபாடு மேன்மையைத் தரும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்மைகள் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
