காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்.. அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசிமேட்டில் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட மீனவர்களின படகுகளை விடுவிக்கவும் முரசு புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி தரக் கோரியும் நடத்தப்பட்ட போரட்டம், இன்று அமைச்சர் மரிய வில்சன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 6 மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை உடனடியாக விடுவிப்பதோடு, விடுவிக்கப்பட்ட படகுகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Kasimedu Fishermen Call Off Protest Following Talks with Minister Marie Wilson

மேலும், முரசு புயலால் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியுடன் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், முரசு புயலால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தன.

இன்று 4 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் சந்தை பரபரப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் போராட்டத்தில் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடியது.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காசிமேடு மீனவர்கள் உடனான தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தையின்போது, வரும் செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்த பிறகுதான் போராட்டத்தை முடிப்போம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தர். அவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் காசிமேடு மீனவர்கள் உடனான தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர்கள் தர்ப்பினருடன் அமைச்சர் மரிய வில்சன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+