கட்டி பிடிக்கக்கூடாது.. முத்தம் கொடுக்க கூட பெர்மிஷன் கேட்கணும்! GTA 6க்காக கணவர் போட்ட வினோத டீல்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் GTA 6 வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இதற்கிடையே இந்த வீடியோ கேமை தடையின்றி விளையாடுவதற்காக, மனைவியிடம் 10 நாட்கள் அனுமதி பெற்று ஒப்பந்தமே போட்டுள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த கேமர் ஒருவர். இந்த வினோத ஒப்பந்தம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே உலகம் முழுக்க GTA 6 குறித்தே பேசப்படுகிறது. ஒரு வீடியோ கேம் ரிலீஸ் குறித்து உலகெங்கும் இதுபோல பேச்சு எழுவது இதுவே முதல்முறையாகும். கடந்த நவம்பர் 19ம் தேதி இந்த GTA 6 உலகெங்கும் ரீலிஸ் ஆனது. இதற்காக அந்த நாளில் பலரும் லீவ் எடுத்தனர். சில நிறுவனங்கள் விடுமுறையே கூட அளித்தனர்.

GTA 6 Singapore GTA 6 launched

அக்ரிமெண்ட்

இதற்கிடையே சிங்கப்பூரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஜூலியன் டே அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார். இந்த கேமிற்காக தனது மனைவி லிசா சானிடம் தனி ஒப்பந்தத்தமே போட்டுவிட்டார். GTA 6 ரிலீஸ் ஆனதில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு தன்னை தடையின்றி கேம் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டுள்ளார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது..

கடந்த அக்டோபர் 18ம் தேதி ஜூலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் GTA வீடியோ கேம் தொடரின் வரலாற்றை தனது மனைவி லிசா சானுக்கு விளக்கிவிட்டு, அவரிடம் GTA VI கேம் அக்ரீமெண்ட் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன்படி நவம்பர் 19 முதல் நவம்பர் 29 வரை ஜூலியன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் GTA 6 விளையாடலாம்.

10 நாட்கள்

அந்த 10 நாட்கள் ஜூலியனை அவரது மனைவி தொந்தரவு செய்யக்கூடாது. கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, சும்மா பேசுவது மட்டுமே ஜூலியனிடம் மனைவி செய்ய வேண்டும். அதுவும் கூட கணவரிடம் கோரிக்கையாகவே வைக்க வேண்டுமாம்.. ஓகே சொன்னால் மட்டுமே செய்யலாம் என்பது நிபந்தனை. இந்த ஒப்பந்தம் இணையத்தில் டிரெண்டாகி இந்த ஜோடி உலகளவில் பேமஸ் ஆகிவிட்டனர்.

விமர்சனம்

ஒருபுறம் பலர் இந்த அக்ரிமெண்ட்டை காமெடியாக எடுத்துக்கொண்டாலும், மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். பேசுவதற்கு கூட கணவரிடம் பெர்மிஷன் வாங்க வேண்டும் என்று இருக்கும் இந்த ஒப்பந்தம் சரியானது இல்லை என்றும் இளம் தலைமுறையினரை தவறான பாதையை நோக்கி செல்ல ஊக்குவிக்கும் என சாடி வருகிறார்கள்.

GTA 6

சுமார் 13 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு GTA 6 கடந்த நவம்பர் 19ம் தேதி வெளியானது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேம் முதற்கட்டமாக பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் தளங்களில் வெளியாகியுள்ளது.. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட 'லியோனிடா' எனும் கற்பனை மாகாணத்தில் இந்த கேம் நடக்கிறது.

ஜேசன் மற்றும் லூசியா ஆகிய இரு முக்கிய கேரக்டர்களை சுற்றியே கேம் நடக்கிறது. இந்த இரு கேரக்டர்களின் விறுவிறுப்பான குற்ற பின்னணியே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. தத்ரூபமான கிராபிக்ஸ், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள இந்த கேம், முன்பதிவிலேயே வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது. மேலும், இந்த கேம் ரிலீஸ் ஆனது முதலே பாசிட்டிவான விமர்சனங்களே இதற்கு கிடைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+