இந்திய முட்டைக்கு ஓமன் தடை.. நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி முட்டைகள் தேக்கம்! குமுறும் பண்ணையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கடலூர் மாவட்​டத்​தில் பறவைக் காய்ச்​சல் பாதிப்பு காரணமாக, ஓமன் நாட்​டில் இந்​திய முட்​டைகளை இறக்​குமதி செய்​யத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இத​னால், நாமக்​கல் மண்​டலத்​தில் இருந்து மாதந்​தோறும் ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வந்த 6 கோடி முட்​டைகளின் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்டுள்​ளது.

நாமக்​கல், சேலம், ஈரோடு, பெருந்​துறை, கோவை உள்​ளிட்ட பகுதி​களை உள்​ளடக்​கிய நாமக்​கல் மண்​டலத்​தில் 1,000-க்​கும் மேற்​பட்ட கோழிப் ​பண்​ணைகள் உள்​ளன. இவற்​றில் 8 கோடி முட்​டைக் கோழிகள் வளர்க்​கப்​படு​கின்​றன. இவற்​றின் மூலம் தினமும் சுமார் 6 கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன.

Egg Oman Namakkal

இங்கு உற்​பத்தி செய்​யப்​படும் முட்​டைகள் தமிழக அரசின் சத்​துணவுத் திட்​டத்​துக்​கும், வெளி​நாடுகளுக்​கும் அனுப்​பப்​படு​கின்​றன. மேலும், கேரளா உள்​ளிட்ட வெளி மாநிலங்​களுக்​கும், தமிழகத்தின் பல்​வேறு மாவட்​டங்​களுக்​கும் லாரி​கள் மூலம் விற்​பனைக்​காக அனுப்பி வைக்​கப்​படு​கின்​றன.

இந்​தி​யாவில் இருந்து அரபு நாடுகளுக்​கும், ஓமன் உள்​ளிட்ட நாடுகளுக்​கும் முட்​டைகள் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. நாமக்​கல் மண்​டலத்​தில் இருந்து மாதம்​தோறும் 3 கோடி முதல் 6 கோடி முட்​டைகள் வரை ஓமன் நாட்​டுக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்டு வந்​தன.

தற்​போது இந்​திய முட்டை இறக்​குமதிக்கு அந்​நாடு முழு​மையாகத் தடை விதித்​துள்​ள​தால் முட்டை இறக்​குமதி​யாளர்​கள், ஏற்​றுமதி​யாளர்​கள் மற்​றும் கோழிப்​பண்​ணை​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும் நாமக்கல்லில் 6 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

கடலூர் மாவட்​டத்​தில் சில கறிக்​கோழிப் பண்​ணைகளில் பறவைக் காய்ச்​சல் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. நோய் மேலும் பர​வாமல் தடுக்​கும் வகை​யில், அப்​பகுதி​யில் உள்ள கோழிப்​பண்​ணைகளில் வளர்க்​கப்​பட்ட கோழிகள் பாதுகாப்பான முறையில் முழு​மையாக அழிக்​கப்​பட்​டுள்​ளன என்று கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்​கல் பகுதி​யில் நவீன கூண்டு முறை​யில் கோழிகள் வளர்க்​கப்​படு​கின்​றன. வெளிநபர்​கள் மற்​றும் வாக​னங்​கள் பண்​ணைக்​குள் நுழையும்​போது கிரு​மிநாசினி தெளிக்​கப்​படு​கிறது. முழு​மையான உயி​ரிப் பாது​காப்பு நடைமுறைகள் கடைப்​பி​டிக்​கப்​படுவ​தால், நாமக்​கல் மண்​டலத்​தில் பறவைக் காய்ச்​சல் பரவுவதற்கு வாய்ப்​பில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே, தற்​போது ஏற்​பட்​டுள்ள நெருக்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள கோழிப்​பண்​ணைத் தொழிலை பாது​காக்​கும் வகை​யில் மத்​திய, மாநில அரசுகள் நாமக்​கல் மண்​டலத்தை தனி முட்டை ஏற்​றுமதி மண்​டலமாக அறிவிக்க வேண்டும். ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முட்டை இறக்குமதிக்கான தடையை நீக்கி, மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+