தமிழகத்தை தாண்டி ஆந்திராவிலும் வெடித்த "கைடன்ஸ் தமிழ்நாடு" சர்ச்சை! ஜெகன் மோகன் ரெட்டி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: தமிழ்நாடு அரசில் வேலை செய்த அதிகாரிகள் ஆந்திர பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தற்போது அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே இது பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், ஆந்திராவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான 'கைடன்ஸ் தமிழ்நாடு' விவகாரம்தான். அந்த அமைப்பில் பணியாற்றிய சில அதிகாரிகள், முக்கியமான தகவல்களை ஆந்திராவுக்குக் கசியவிட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை மறுத்திருந்தாலும் கூட இது அரசியல் ரீதியாக பேசுபொருளானது.

Jagan Mohan Reddy Nara Lokesh Tamil Nadu Guidance

ஜெகன் மோகன் பாய்ச்சல்

இந்த அதிகாரிகளுக்கு ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசு வேலைவாய்ப்பும் பதவிகளும் வழங்கியுள்ளதாக ஜெகன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், தகவல் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆந்திர அரசு ஆதரவு அளிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷையும் அவர் கடுமையாக சாடியுள்ளார். நாரா லோகேஷை நேரடியாக சாடிய ஜெகன், 'கிரெடிட் திருட்டு, ஓட்டு திருட்டு, டேட்டா திருட்டு' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

திருட்டு கும்பல்

ஆந்திராவில் திருட்டு கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக சாடிய ஜெகன், தமிழ்நாடு அரசிலும் இதேபோன்ற டேட்டா திருட்டு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தகவல்களை திருடியதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு ஆந்திராவில் பதவிகளும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கைடன்ஸ் தமிழ்நாடு விவகாரம் முதலில் வெடித்த போது, தமிழ்நாடு அரசு அதை மறித்திருந்தது. அதிகாரிகள் இதுபோல வேலையைவிட்டு விலகுவது வழக்கமான நிர்வாக நடவடிக்கைதான் என்றே கூறியிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் விஜய் அரசை கிண்டல் செய்யும் விதமாக நாரா லோகேஷ் நேற்று முன்தினம் ட்வீட் செய்திருந்தார். அதாவது முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்வதே தங்களது டாப் சீக்ரெட் திட்டம் என நக்கல் செய்யும் விதமாக ட்வீட் செய்திருந்தார்.

கேள்வி

இந்த சூழலில் தான் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசின் நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் ஆந்திராவில் எப்படி பணியமர்த்தப்பட்டார்கள் என்பதே அவரது கேள்வி உள்ளது.

பின்னணி

தமிழ்நாட்டின் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பாக Guidance Tamil Nadu இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல முக்கிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு பெற்று தந்துள்ளது. கடந்த மே மாதம் விஜய் ஆட்சி அந்த நிலையில், ஜூலை மாதம் இதில் வேலை செய்து வந்த சுமார் 15 அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதில் மூன்று பேர் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்துள்ளனர். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் சமீப காலமாகவே ஆந்திராவுக்கு அதிகம் செல்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+