எல்லா டெண்டரும் செட்டிங்..விஜய்யை ஏமாற்றும் கோவை மாநகரட்சி அதிகாரிகள்.. ஒப்பந்ததாரர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிவிட்டது. திமுக, அதிமுகவின் 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டி தவெக அரியணையில் ஏறியது. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என முதலமைச்சர் விஜய் சூளுரைத்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறையிலேயே ஊழல் புகார் கொடிகட்டி பறக்கிறது. கோவை மாநகராட்சி அதிகாரிகள், மேயருடன் இணைந்து டெண்டர் முறைகேடு செய்வதாகவும், விஜயை ஏமாற்றுவதாகவும் ஒப்பந்ததாரர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்று என தேர்தலில் பிரச்சாரம் செய்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

Coimbatore Corporation Vijay

கோவை மாநகராட்சியில் ஊழல்

அதிமுக ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். கோவை அவரின் சொந்த ஊர். அதனால் கோவை மாநகராட்சி அவரின் கண் அசைவில் இயங்கியது. திமுக ஆட்சியில் வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முறைகேட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கும் தொடர்புள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. ஒப்பந்ததாரர் சங்கத்தினர் முதலமைச்சர் விஜய், அமைச்சர்களிடம் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரிதாக வெடித்தது. திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. தவெக ஆட்சியிலும் ஊழல், முறைகேடு புகார் இல்லாமல் இல்லை.

ஒப்பந்ததாரர் புகார்

கோவையில் கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள திருவேங்கடம் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோவை, ஒசூர் உள்ளிட்ட மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறேன். அதிமுக, திமுக நிர்வாகத்துடன் தவெக ஆட்சியையும் பார்த்துவிட்டேன். தவெக ஆட்சிக்கு வந்ததும் பார்ட்டி பண்ட் முறையை ஒழித்ததாக கூறி பெருமைபட்டார்கள். டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். லஞ்சம் இருக்க கூடாது என்றெல்லாம் சொன்னார்கள்.

முதலமைச்சர் பெரிதாக சொன்னாலும், லஞ்சமில்லாமல் நிர்வாகம் நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. மேயராக உள்ள ரங்கநாயகி பார்ட்டி பண்ட் வசூல் செய்கிறார். 2 சதவிகிதம் கமிஷன் கொடுப்பதை கட்டாயமாக்கியுள்ளார். அவருக்கு பணம் கொடுக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணி செல்கிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வேலையை ரத்து செய்கிறார்கள். கோவை
மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை பணிகள் முடங்கியுள்ளன.

ஏமாற்றும் அதிகாரிகள்

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் ரூ.300 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர். பணம் தராததால் ரூ.20 கோடிக்கும் மேற்பட்ட பணி கிடப்பில் போட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் சுமார் 190 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். பணம் கொடுக்கும் குறிப்பிட்ட 6 நிறுவனங்களுக்கு மட்டுமே பெரும்பாலான பணிகள் சென்றுள்ளது. அவர்களுடன் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து டெண்டர் செட்டிங்கில் ஈடுபடுகிறார்கள். டெண்டரில் நிர்வாக செலவுக்கு குறிப்பிட்ட மதிப்பு ஒதுக்குவார்கள். பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் அதில் ஜீரோ என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜீரோவுக்கு மதிப்பே இல்லை. அதை ஒரு மதிப்பாக எடுத்து கொள்கிறார்கள். வெளிப்படைத்தன்மை என கூறிவிட்டு குலுக்கல் முறையில் டெண்டர் நடத்தப்படுகிறது. 4 ஒப்பந்ததாரர்களை அழைத்து குலுக்கல் நடத்தி, அனைவருக்கும் வேலை கொடுக்கிறார்கள். இது அங்கீகரிக்கப்படாத முறை. ஆனால் துறையில் வாய்மொழியாக கேட்டு நடத்துகிறோம் என அதிகாரிகள் சொல்கிறார்கள். விஜய்யை ஏமாற்றுகிறார்கள். இதுகுறித்து அவரிடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+