கொளத்தூர் தொகுதி காலி.. தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவை அடுத்து சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை எம்.எல்.ஏ ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதில், சமீபத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மட்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. விரைவில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kolathur by election

இந்நிலையில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதனால் கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவை அடுத்து சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பை, கரூர், கொளத்தூர் ஆகிய 6 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

இந்த 6 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. அவற்றோடு தமிழ்நாட்டின் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது, காலியாக இருக்கும் 6 தொகுதிகள் தவிர 228 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் தவெக - 108, திமுக - 59, அதிமுக - 41, காங்கிரஸ் - 5, பாமக - 4, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐ.யூ.எம்.எல் - தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அமமுக, தேமுதிக, பாஜகவுக்கு தலா 1 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+