இனி என் மனைவி நல்லாயிருப்பா! "கிட்னி" தானம் கொடுத்த கணவர் கண்முன்னே அதிர்ச்சி.. இப்படியா நடக்கணும்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மனைவி மீது அதீத பாசம்.. மனைவி முகத்தில் எப்போதும் சிரிப்பு தான் இருக்க வேண்டும் என்று விரும்புபவர் அந்த பெங்களூர் தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்தாலும் கூட தனது ஒரு கிட்னியை கொடுத்து மனைவியை காப்பாற்றியவர். இப்படி மனைவியுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட அந்த நபருக்கு இப்போது அதிர்ச்சி நேர்ந்துள்ளது. இருவரும் சென்ற டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் அவரது கண்முன்னே மனைவி இறந்ததும், இறந்த பிறகு மனைவியின் உடலை மடியில் வைத்து தனியார் நிறுவன ஊழியர் சொன்ன வார்த்தைகளும் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

bengaluru-woman-dies-in-hit-and-run-after-her-husband-donates-kidneys

பெங்களூர் லக்கேரேவை சேர்ந்தவர் சிவாஜி ராவ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் வீணாபாய் (வயது 38). இந்த தம்பதி துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்கு டூவீலரில் சென்றனர். மடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். டூவீலரை சிவாஜிராவ் ஓட்டினார்.

இருவரும் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகாவில் உள்ள எடேஹள்ளி கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சரக்கு வாகனம் ஒன்று அவர்களின் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் சிவாஜி ராவ் - வீணாபாய் ஆகியோர் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் வீணாபாய் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவாஜிராவ் லேசான காயமடைந்தார். தனது கண்முன்னே மனைவி இறந்ததை நினைத்து சிவாஜிராவ் கலங்கிப்போனார். மனைவி வீணாபாய் உடல் அருகே அமர்ந்த சிவாஜிராவ் கதறி அழுதார். மனைவியின் உடலை மடியில் வைத்து கொண்டார்.

அப்போது அவர், ''என் மனைவி வாழ்க்கை முழுவதும் சிரித்தபடி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் கிட்னி தானமாக கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரேயடியாக என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாளே'' என கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

இதற்கிடையே தான் இறந்த வீணாபாய், கணவர் சிவாஜி ராவ் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இறந்த வீணாபாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். குறைந்த ரத்த அழுத்தம் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. பிறகு அவரது 2 கிட்னிகளும் செயலிழந்தன. இதனால் உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த சிவாஜி ராவ், வீணாபாய்க்கு கிட்னி தானம் செய்ய முன்வந்தார். அவரது கிட்னி, வீணாபாய்க்கு பொருந்தியது. இதையடுத்து சிவாஜி ராவ், வீணாபாய்க்கு கிட்னியை வழங்கினார். அறுவை சிகிச்சை வழியாக சிவாஜி ராவ் கிட்னி, வீணாபாய்க்கு பொருத்தப்பட்டது.

இனி மனைவிக்கு பிரச்சனை இல்லை. அவருடன் நீண்டகாலம் வாழலாம் என்று சிவாஜிராவ் நினைத்து இருந்தார். ஆனால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த 2 ஆண்டுகளுக்குள் விபத்தில் மனைவி வீணாபாய்யைt பறிகொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த தம்பதி சித்தகங்கா மடத்துக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். உடல்நல பிரச்சனைகளில் இருந்து மீண்டும் வந்ததற்கு இந்த மடத்தில் மேற்கொண்ட வழிபாடும் ஒரு காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனால் அடிக்கடி மடத்துக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் மடத்துக்கு சென்று வந்தபோது தான் விபத்து ஏற்பட்டு வீணாபாய் இறந்துள்ளார். இது அவரது குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+