சிங்கப் பாதை தான் இனி.. மிதுனம் ராசிக்கு வெற்றி மேல் வெற்றி.. பண வரவு கொட்டும்
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். ராகவேந்திரர் வழிபாடு செய்வது பலவிதத்தில் ஏற்றம் ஏற்படும். குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஏதாவதொரு வகையில் குரு வழிபாடு செய்வது ஜெயத்தை ஏற்படுத்தும்.
வெற்றி மேல் வெற்றி
அரசுத் துறை, அரசியல்வாதிகள், தொழில் துறையில் மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்கள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கொண்டாட்டம்
பெரும் வெற்றிகளைப் பெறக்கூடிய காலகட்டம். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். பஞ்சம ஸ்தானம் அற்புதமாக இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும். 3 ஆம் இடம் பாதிக்கப்பட்டுள்ளதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. கழுத்து பிடிப்பது, சுழுக்கு, தொண்டை பாதிப்புகள், தோள்பட்டை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வெளியூர், வெளிநாடு யோகம்
உங்கள் தம்பி குழப்ப நிலையில் இருப்பது, வேலை பாதிக்கப்படுவது, நல்ல காரியத்தில் பிரச்சனைகள் அவருக்கு வரும். உங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வெளியூர் பயணம், வெளிநாடு பயணம் ஏற்படும்.
வழிபாடு
மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலைச்சல்கள் ஏற்படும் ஆனாலும் மகிழ்ச்சி பொங்கும். பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள், நரசிங்கப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
