ரிஷபம் ராசி பலன்: வெளிநாட்டு வேலை கிடைக்குமா?.. தொழிலில் வெற்றி.. பணவரவுக்கு உத்தரவாதம்
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய அற்புதமான காலகட்டம். வேலைகளில் அற்புதமான மாற்றம் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக ஏதாவது வேலை தொடங்கக்கூடிய யோகம். கடன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். வேலையை எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
சனி வக்ர கதி
எல்லா விஷயங்களையும் கஷ்டப்படாமல் செய்வீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. எலும்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பின்புறப் பகுதி வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சனி வக்கிர கதி இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. 24, 25, 26 ஆம் தேதிகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும். குழப்பமான மன நிலை இருந்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.
பணவரவு
கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான வாரம். 7 ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வாக்குவாதங்கள் வழக்கு, போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பண வரவுக்கான உத்தரவாதங்கள் ஏற்படும்.
தொழில் கைகொடுக்கும்
தொழில், வியாபாரம் இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லா விஷயங்களும் கைகொடுக்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். வழக்குகளில் உள்ள சங்கடங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது, அவர்களுடைய ஆரோக்கியத்தில் நிவர்த்தி ஏற்படுவது சந்தோஷத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
பெருமாள், விஷ்ணு, கபாலீஸ்வர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
