வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்!
சென்னை: சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு சென்ற நிலையில், தமிழகத்திற்கு மழை போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழகத்திற்கு மழையை கொண்டு வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "தென்னிந்தியா மற்றும் இலங்கையில் தற்போது வானிலை தெளிவாக இருக்கிறது. இருப்பினும், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி/கிழக்கு திசை காற்றழுத்த தாழ்வு பகுதியானது வறண்ட காற்றை அகற்ற தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எனவே வடகிழக்கு பருவமழை படிப்படியாக வேகம் பெறும். நவ.23 முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக நேற்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், "23-11-2026: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
24-11-2026: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
25-11-2026: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் காரைக்காலில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
