உண்ட வீட்டிற்கே இரண்டகம்! பெங்களூர் டாக்டர் வீட்டில் ரூ.91.75 லட்சம் நகைகள் திருட்டு! பணிப்பெண் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தும்கூரு அருகே டாக்டர் தம்பதியிடம் அடைக்கலமாக வந்து சுமார் ரூ 91 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை திருடியதாக புகாரின் பேரில் வீட்டு பணிப் பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தும்கூரு மாவட்டம், ஜெயநகர் போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் யஷ்வந்த். இவரது மனைவி நளினி. இவரும் மருத்துவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகா (24) என்ற கர்ப்பிணி, தனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை இருப்பதாக கூறி அவர்களிடம் உதவி கேட்டு வந்தார்.

karnataka crime

மேலும் சினேகாவின் கணவர் ராகேஷ், மாமியாருக்கும் தங்குவதற்கான இடத்தை அளித்து டாக்டர் தம்பதி உதவி செய்தனர். இதையடுத்து அந்த வீட்டில் உள்ள வேலைகளை சினேகா செய்துள்ளார். டாக்டர் தம்பதியிடம் நல்லவர் போல் நடித்து அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.

6 மாதங்கள்

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் பல்வேறு அறைகளில் இருந்த லாக்கர்களின் சாவிகளை திருடி எடுத்து வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் லாக்கரை திறந்து அவ்வப்போது சிறுக சிறுக திருடி 800 கிராமுக்கும் அதிகமான தங்கம், வைர நகைகளை திருடியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.91.75 லட்சமாகும்.

டாக்டர் குடும்பத்தின் நகைகள்

அந்த நகைகளில் டாக்டர் குடும்பத்தின் பரம்பரை நகைகள், நளினிக்கு திருமணத்தின் போது போட்ட நகைகள், கணவர் வாங்கிக் கொடுக்க நகைகள் எல்லாம் இருந்தன. இந்த நிலையில் வரலட்சுமி பண்டிகையையொட்டி லாக்கர்களை திறந்து நகைகளை எடுக்க சென்றனர்.

லாக்கர் சாவி

அப்போதுதான் லாக்கர் சாவி காணாமல் போனது தெரியவந்தது. ஒரு வேளை மறதியாக எங்காவது வைத்திருக்கலாம் என நினைத்து சாவி செய்பவரை அழைத்து வந்து டூப்ளிகேட் சாவி செய்து லாக்கர்களை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு டாக்டர் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸில் புகார்

இதுகுறித்து ஜெயநகர் போலீஸில் டாக்டர் தம்பதி புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் சினேகா மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நகைகளை திருடியதை சினேகா ஒப்புக் கொண்டார். மேலும் தான் திருடிய நகைகளை சவுமியா என்ற பெண்ணிடம் கொடுத்து விற்பனை செய்ததும், அதில் வந்த பணத்தில் கார், பைக், ஆட்டோக்களை வாங்கி போட்டதும் தெரியவந்தது.

டாக்டரின் தாய், குழந்தையை கொலை செய்ய திட்டம்

இதையடுத்து போலீஸார் சினேகா, சவுமியாவை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் கிடைத்தன. நகை திருட்டில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் டாக்டர் யஷ்வந்தின் தாயாரையும், அவர்களது குழந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். கொலைக்கு பின்னர் மர்ம நபர்கள் நகைகளை திருடிவிட்டதாக பழிபோட்டு இவர்கள் தப்பிக்க நினைத்திருந்தனராம்.

220 கிராம் நகைகள் பறிமுதல்

கைதான பெண்களிடம் இருந்து ஒரு கார், 2 பைக், 2 ஆட்டோக்கள், 220 கிராம் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கர்ப்பிணியாக வந்து அடைக்கலம் கேட்டு உண்ட வீட்டிலேயே இரண்டகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+