ஏன் இவ்வளவு முட்டு.. இதுக்கு மாணிக்கம் தாகூர் தவெகவில் சேர்ந்துடலாம்.. அண்ணாமலை விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாஜகவின் நிலைப்பாட்டை அண்ணாமலை எடுத்ததை மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தவெகவுக்கு முட்டு கொடுப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மத அரசியலை மனதில் வைத்து செயல்படுகிறது. முழு விபரங்களை தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பாஜக எடுக்கும் முடிவையே அண்ணாமலை ஆமோதிக்கிறார். பாஜகவுடன் இன்றளவும் தொடர்பில் இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தவெக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார்.

manickam-tagore-should-resign-from-congress-and-join-in-tvk-said-annamalai

தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் முட்டு

சென்னை விமான நிலையத்தில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெகவுக்கு அதிகளவு முட்டு கொடுப்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தான். அவர் தான் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ, பெண் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் சொல்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.

தவெகவில் இணைய வேண்டும்

இல்லை.. இல்லை சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என மாணிக்கம் தாகூர் சொல்கிறார். அதே கருத்துக்கு அவரின் கட்சியில் இருந்தே எதிர் கருத்துகள் வருகின்றன. செல்வப்பெருந்தகை அவரை எதிர்த்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்து கொண்டு, தவெகவில் இணைய வேண்டுமென அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அது அவருக்கு சரியாக இருக்கும். தவெகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொண்டு பேசட்டும்.

பாடம் எடுக்க வேண்டாம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் ஏன் முன்னுக்கு பின் முரணாக பேச வேண்டும். அவர் எத்தனை முறை திருப்பரங்குன்றம் சென்றிருக்கிறார். முருக பக்தர்களுக்கு காங்கிரஸ் கட்சி தயவு செய்து பாடமெடுக்க வேண்டாம். முருகனை யார் கும்பிடணும், எப்படி கும்பிடணும், எப்படி காவடி எடுக்கணும் என எங்களுக்கு தெரியும். நான் ஒவ்வொரு ஆண்டும் பழநி முருகனுக்கு காவடி எடுக்கிறேன். எங்களிடம் வந்து மாணிக்கம் தாகூர் முருக பெருமானுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டாம்" எஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+