மேஷம் ராசி: வாழ்க்கைத் துணையால் வரும் வெற்றி.. தங்க நகை, சொத்து சேர்க்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mesham-people-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலைகளை பொறுமையாக செய்வது நல்லது. உறவுகளை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், பயணம் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பண விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும்.

பிறர் தலையீடு

குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையேயான சண்டை, காதல் அமைப்பில் சண்டைகள் இருந்தாலும் நீங்கள் இணக்கமாக, சமாதானமாக செல்வது நன்மைகளைத் தரும். குடும்ப விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சிறிய கோபம் கூட தேவையில்லாத பதட்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படும்.

அனுகூலம்

தொழில், உத்தியோகம், நல்ல காரியங்கள், பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த அமைப்பில் அனுகூலம் உண்டாகும். தூக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தூக்கமில்லாதவர்கள் குடும்ப மருத்துவரை அணுகுவது நன்மை தரும். அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். தைரியம், வீரியம், தன்னம்பிக்கை ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு பெரிய வெற்றி கிடைக்கும்.

வீடு, சொத்து யோகம்

வாழ்க்கைத் துணையின் பேரில் வீடு, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தங்க நகைகள் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். குடும்பத்திற்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+