தனுஷின் "ஓம்” வசூல் வேட்டை.. 2வது நாளில் நடந்த மாற்றம்.. இப்படியே போனால் நிலைமை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்க பலர் காத்திருக்கின்றனர். அதிலும் அவர் சமீபத்தில் நடித்த "ஓம்" படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக இருந்ததால், 2வது நாள் வசூல் நிலவரத்தையும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் நாளை விட இப்போது 15 சதவீதம் குறைவடைந்து இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியான ஓம் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 33 கோடி வசூல் செய்ததாக சாக்நிக் தெரிவித்திருந்தது. இந்தியாவில் மட்டும் 18.10 கோடி நெட் வசூலும், வெளிநாடுகளில் சுமார் 12 கோடி வசூலும் கிடைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தனுஷின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகப்பெரிய ஒப்பனிங். இதற்கு முன்பு அவரது அதிக முதல் நாள் வசூல் படமாக இருந்த "தேரா இஷ்க் மெய்ன்" படத்தின் சாதனையை ஓம் முந்தியதாக கூறப்பட்டது.

Dhanush O M Movie Box Office Mammootty Sai Pallavi

2வது நாள் வசூல் நிலவரம்

ஏற்கனவே இந்த படத்தின் ப்ரோமோஷனில் கொடுத்த ஹைப் காரணமாகவே முதல் நாள் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோது கூட ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். அதனாலேயே படத்தின் வசூல் அதிகமாக இருந்தது. அதனால் எந்த படம் தனுஷுக்கு கம்பேக் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால் நேற்று 2வது நாளான சனிக்கிழமை வசூல் நிலவரம் பார்க்கும்போது கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

தனுஷின் ஓம் வசூல்

இந்தியாவில் சுமார் 15.40 கோடி நிகர வசூல் கிடைத்ததாக சாக்நிக் தெரிவித்து இருக்கிறது. இதனால் முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது வசூல் சற்று குறைந்து இருக்கிறது. 2 நாட்களையும் சேர்த்து பார்த்தால் இந்தியாவில் நிகர வசூல் சுமார் 33.50 கோடி, இந்தியாவில் மொத்த வசூல் 38.90 கோடி என்றும் வெளிநாடுகளில் 22 கோடி என்றும் கூறப்படுகிறது. இதன்படி உலகம் முழுவதும் 2 நாட்களில் சுமார் 60. 90 கோடி வசூலை ஓம் பெற்றிருக்கிறது. ஆனாலும் முதல் நாள் நிலவரத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைந்ததாக இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த வசூல் நிலவரத்தை பார்த்தால் இந்த படம் 100 கோடி வசூலில் இணையுமா? என்ற கேள்விகளும் எழுகிறது. இப்போது முக்கியமான கேள்வி ஞாயிற்றுக்கிழமை வசூல் தான். முதல் நாளில் பெரிய ஓபனிங் கொடுத்து 2 நாட்களில் 60 கோடியை தாண்டியதாக கணிக்கப்பட்டு இருக்கும் இந்த படம் வார இறுதியின் கடைசி நாளிலும் இதே வேகத்தை தக்க வைக்குமா? இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைந்த வசூல் மீண்டும் உயருமா? இதுதான் இப்போது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸை கணிப்பவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+