அனிருத் ரிசப்ஷனிலும் கலந்து கொள்ளாத தனுஷ்.. அந்த காரணம் உண்மைதானா? ரசிகர்கள் கேள்வி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு பிரபலம் மட்டும் அங்கு வரவில்லை. அவர் தனுஷ் தான். நிகழ்ச்சிக்கு தனுஷ் வராதது இப்போ ரசிகர் மத்தியில் பழைய கேள்விகளை மீண்டும் கிளப்பி இருக்கிறது.

Dhanush Anirudh Kavya Maran

அனிருத் திருமண வரவேற்பு

நேற்று மாலையில் அனிருத் ரிசப்ஷன் மாலையில் நடப்பதாக இருந்தாலும் காலையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்தது. அதிலும் அதிகமானோர் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுப்பினர். காரணம் திருமண நிகழ்ச்சியிலும் கூட தனுஷ் கலந்து கொள்ளாதது தான். ஏற்கனவே இருவருக்கும் மனக்கசப்பு பிரிந்து விட்டனர், அதனால்தான் சமீப காலமாக தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது.

Dhanush Anirudh Kavya Maran

அனிருத்துக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்து அவரை சினிமா உலகில் பிரபலப்படுத்தியது தனுஷ் தான். '3' திரைப்படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் தான் அனிருத் பெரியதாக பேசப்பட்டார். இந்த படத்திற்கு இசையமைக்கும் போது அனிருத் 12ம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். அப்போதும் ஐஸ்வர்யாவிடம் அனிருத்துக்கு வாய்ப்பு வழங்க சொல்லி தனுஷ் கேட்டதாக ஏற்கனவே சில பேட்டிகளில் அனிருத் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும்போது தன்னை ஏத்தி விட்ட ஏணியை அனிருத் மறந்து விடமாட்டார், எப்படியும் அவருடைய ரிசப்ஷனில் தனுஷ் கலந்து கொள்வார் என்று பலரும் கூறி வந்தனர்.

Dhanush Anirudh Kavya Maran

ரிசப்ஷனுக்கு வராத தனுஷ்

ஆனால் நேற்று ரிசப்ஷனில் தனுஷ் கலந்து கொள்ளாதது இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அனிருத் கல்யாணத்தில் ரஜினி குடும்பம் கலந்து கொள்ளும்போது தனுஷ் கலந்து கொள்வார், அப்போது கூட மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்பது போல அந்த ஃபங்ஷனில் தனுஷ் கலந்து கொள்ளவே இல்லை. ஆனால் அந்த சமயத்தில் கூட தனுஷ் "ஓம்" படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருப்பதால் திருமணத்திற்கு கிரீஸ்க்கு போகவில்லை, ஆனால் ரிசப்ஷனில் எப்படியும் கலந்து கொள்வார் என்று சிலர் சொல்லி வந்தனர். ஆனால் இப்போது அதுவும் நடக்காமல் போய்விட்டது.

Dhanush Anirudh Kavya Maran

அனிருத் அறிக்கை

முன்னதாக அனிருத், சினிமாவில் தனது முதல் பாடல் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரசிகர்களுக்கும், தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று அவர் சொல்லியிருந்தார். அந்த அறிக்கையிலும் தனுஷ் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அதனால் இருவருக்கும் உண்மையிலேயே மனக்கசப்பு இருக்கிறதா? என்று கேள்விகளும் எழுந்து வந்தது இப்போ அதை உறுதி செய்கிற மாதிரி தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதை பற்றி தனுஷ் அல்லது அனிருத் விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+