தவறாக போகும் கணக்கு.. இஸ்ரேலில் மீண்டும் பவர் சென்டராக உருவெடுக்கும் நெதன்யாகு!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட்டின் யாஷர் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் அரபு கட்சிகள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறதோ.. அக்கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். நிலைமை இப்படி இருக்கையில் காடி, நெதன்யாகுவை பேச்சவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். இதன் மூலம் நெதன்யாகு மீண்டும் பவர் சென்டராக உருவெடுக்க இருக்கிறார்.

முன்னாள் ராணுவ தளபதியான எதிர்க்கட்சித் தலைவர் ஐசன், தனது கூட்டணியை சேர்ந்த 48 உறுப்பினர்கள் மற்றும் அரபுக் கட்சிகளின் 19 உறுப்பினர்கள் என மொத்தம் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கிடைத்ததையடுத்து.. அரசமைக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதிக்குள் நெதன்யாகுவுக்கு மாற்றாக புதிய அரசை அவர் அமைக்க வேண்டும்.

Israel Netanyahu

ஆனால், விரிவான அடிப்படையிலான தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராயும் வகையில், இன்று முதல் லிகுட் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்துமாறு ஐசன் தனது கட்சித் தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இதே போன்று நவம்பர் 15ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. இப்படி இருக்கையில் தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது.

இந்த பேச்சுவார்தையிலும், கூட்டணியிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் பேசுவது ஓகேதான். ஆனால், மீண்டும் நெதன்யாகு பிரதமராக கூடாது என்பதில் ஐசன் கட்சியில் உள்ள முக்கிய தலைவரான முன்னாள் பிரதமர் பென்னட் உறுதியாக இருக்கிறார். லிகுட் கட்சியை விட்டுவிட்டு தீவிர ஆர்த்தடெக்ஸ் கட்சிகளை இணைத்து மாற்று அரசை அமைக்க வேண்டும் என வேறு சில தலைவர்கள் யோசனை கொடுத்து வருகின்றனர்.

ஐசனின் கட்சிக்கு அரபு கட்சிகளின் ஆதரவு இருந்தாலுமே கூட.. அரபு கட்சி வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால், அந்த அரசு நீண்ட நாட்களுக்கு நிலையானதாக இருக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. எனவேதான் அரபு கட்சிகளை மட்டும் நம்பாமல், ஆளும் கட்சியும் கூட்டணிக்குள் இழுக்க ஐசன் முயற்சித்து வருகிறார்.

இந்த கூட்டணி யோசனை ஓகே தான். ஆனால், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பதில் தான் பெரிய சிக்கல் இருக்கிறது. இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால்.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும். ஒருவேளை பின்னடைவு ஏற்படுகிறது என்றாலும் கடைசி வாய்ப்பாக அரபுக் கட்சிகளின் ஆதரவை வைத்து ஐசன் ஆட்சியை அமைப்பார்.

லிகுட் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டால் நெதன்யாகுவுக்கு பிரதமருக்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும். உடன்பாடு எட்டப்படவில்லை எனில், எதிர்க்கட்சியின் வலிமையாக தலைவராக நெதன்யாகு வருவார். இது எப்படி இருந்தாலும் இஸ்ரேலில் நெதன்யாகு மீண்டும் பவர் சென்டராக உருவெடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+