சென்னை டூ கன்னியாகுமரி.. இனி சல்லுன்னு போகலாம்! மத்திய அரசு ஒப்புதலுக்குப் போன கோப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் (ஜி.எஸ்.டி சாலை) போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான 68 கிலோமீட்டர் தூரச் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்திற்கான கோப்புகள், மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

automobile

தமிழகத்தின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக சென்னை - கன்னியாகுமரி ஜி.எஸ்.டி சாலை விளங்குகிறது. தற்போது 4 வழிச்சாலையாக இருக்கும் இந்தப் பாதையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகிவிட்டது. சாதாரண நாட்களிலேயே இந்த 68 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

இந்தப் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், செங்கல்பட்டு (பரனூர்) முதல் திண்டிவனம் (சலவாதி) வரையிலான 68 கிலோமீட்டர் சாலையை 4 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை குமரி 6 வழிச்சாலை

இந்தத் திட்டத்தின் கீழ் 6 வழிச்சாலை மட்டுமின்றி, இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், செங்கல்பட்டு நகரப் பகுதியில் ஏற்படும் கடும் நெரிசலைத் தவிர்க்கப் புதிய புறவழிச்சாலை (Bypass) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது இந்த வழித்தடத்தில் படாளம், புக்கத்துறை மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வாகன சுரங்கப்பாதை (Underpass) மற்றும் மேம்பாலப் பணிகள் முதலில் முடிக்கப்படும். அதன் பிறகே 6 வழிச்சாலைக்கான பிரதான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே, சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையை படிப்படியாக 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் டெல்லி சென்றபோது மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே முதற்கட்டமாக 6 வழிச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் மற்ற பகுதிகளிலும் படிப்படியாகச் சாலை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து வெறும் 30 முதல் 40 நிமிடங்களாகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகள் மற்றும் கார் ஓட்டிகளின் பயண நேரம் மிச்சமாவதுடன், எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+