சாவு வீட்டில் செருப்பு போடாமல்.. பூவைத் தூவி ரீல்ஸ் எடுக்குறாங்க! சிஎம் விஜய்யை விளாசிய கீதா ஜீவன்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தவெக ஆட்சியில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இளைஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எந்த வயதாக இருந்தாலும் பாதுகாப்பற்ற ஒரு சூழல் நிலவுகிறது. யாருக்கும் பயமில்லை. தண்டனைக்கோ காவல்துறைக்கோ பயமற்ற சூழல் வளர்ந்து வருகிறது. இதை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் ஒரு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் உலக மீனவர் தின நிகழ்ச்சியில் முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர் செய்த செய்தியாளர்களை சந்தித்த அவர்," இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே 16 வயது பெண் கத்தியால் குத்தப்பட்டு இறந்து உள்ள சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரிய செயல்.

எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று அந்த இளைஞர் அந்தப் பெண்ணை குத்திவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்று கொண்டு உள்ளார். இளம் வயதினர் இளைஞர்கள் இளம்பெண்கள் நம்முடைய ஒருவருக்கு ஒருவர் விரும்புவதை நாம் தவறாக சொல்லவில்லை. ஆனால் 18 வயது முடியட்டும்.

Geetha Jeevan Vijay TVK

கீதா ஜீவன்

அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரைக்கும் உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற ஒரு போட்டியினால், என்னை லவ் பண்ணவில்லை. உன்னை லவ் பண்ணவில்லை என்ற போட்டியில் கொல்வது என்றால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை, இளைஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, எந்த வயதாக இருந்தாலும் பாதுகாப்பற்ற ஒரு சூழல் நிலவுகிறது, யாருக்கும் பயமில்லை, தண்டனைக்கோ காவல்துறைக்கோ பயமற்ற சூழல் வளர்ந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு

இதை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் ஒரு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் நிலைநாட்டிட வேண்டும். காவல்துறையின் செயல் சிரிப்பாக உள்ளது. தொலைந்து போன குழந்தையை கண்டுபிடியுங்கள் என்றால் காவல்துறையினர் உட்கார்ந்து கொண்டு யாகம் வளர்த்துக் கொண்டிருப்பது.. என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை. என்ன இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது?

பூவை தூவி ரீல்ஸ்

தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி போகிறது மிகப்பெரிய கேள்விக்குறி. காவல்துறையினர் தனது கடமையை செய்யாமல் மடைமாற்றம் செய்கின்ற ஒரு ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்வை பார்த்தீர்கள் என்றால் காலில் செருப்பு இல்லாமல் விஎஸ் பாபுவை தூக்கிச் சென்றாராம். செருப்பு இல்லாமல் தூக்கி செல்ல வேண்டும் என்று சட்டம் கிடையாது. செருப்பு இல்லாமல் போவது.. செருப்பு இல்லாமல் போவதால் போற இடம் எல்லாம் பூவை தூவி போவது எல்லாமே ஷூட்டிங்காக இருக்கிறது. அதேபோல் காவல்துறை மடைமாற்றம் செய்ய திசை திருப்ப காவல்துறையினர் செய்த செயல் வருந்தக்கூடிய செயல்.

பெண் எஸ்பி

அமைச்சர்கள் எல்லாரும் தன் நிலை அறியாமல் இருக்கிறார்கள். தன் நிலை என்ன தன்னுடைய கடமை என்ன ஒரு பெண்ணை ஆறு மணிக்கு மேல் காவல் நிலையத்திற்கு அழைக்கக்கூடாது வைக்கவே கூடாது. விசாரணை என்கிற பெயரில் வைக்கக் கூடாது என சட்டம் இருக்கும்போது மந்திரி போய் உட்கார்ந்து கொண்டு ஒரு பெண் எஸ்பிஐ தொலைபேசி மூலம் இங்கே வா என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

மாவட்ட ஆட்சித் தலைவர்

மாவட்ட ஆட்சித் தலைவரையும் பெண் என்றுதான் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் என்று பார்க்கவில்லை. பெண்ணானவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பெண்ணாக போக பொருளாக அவரிடம் நாம் பேசுவோம்.. நக்கல் பேசுவோம்.. கலாய்ப்போம்.. என்கிற மாதிரியான மனநிலை ஏன் இப்படி உருவாகி உள்ளது தமிழகத்தில் என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது.

தமிழக வெற்றி கழக ஆட்சி

இதைப் பார்த்து தலை குனிவு தான் ஏற்படுகிறது. பெண் ஒரு பெண்ணை மதிக்கத் தெரியாத தமிழக வெற்றி கழக ஆட்சி நடைபெறுகிறது. தமிழக முதல்வருக்கு ஏதாவது உத்தரவு வந்திருக்கும் அதனால் அவர் வாய் திறக்காமல் உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலைகள் நமக்கு சலிப்பு வந்துவிட்டது. இதேபோன்று குற்ற செயல்கள் நடைபெறுகிறது ஏன் என்று சொல்லிச் சொல்லி நமக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. 30 நாளில் 16 கொலை. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் என்று சொன்னால் இல்லை இல்லை போன வருடத்தை விட ஒரு கொலை கம்மிதான் என்று பேசக்கூடிய அதிகாரிகள் ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு என்ன சொல்வது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+