தேமுதிக எம்பி சுதீஷ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்.. பிரேமலதாவுடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலாங்கரையில் நடைபெற்ற தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் மகள் ஜானு - அகில் ரவிக்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரையும் சந்தித்தார்.

தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் மகள் ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிக்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்பதால், அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.

Vijay

இந்த நிலையில் முதல்வர் விஜய்யும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிக்குமார் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மேடையில் நின்றிருந்த பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். அதேபோல் அவர்களின் குழந்தைகளையும் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

முதல்வர் விஜய் சில மணி நேரங்களுக்கு முன் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தம்பதியை வாழ்த்தினார். அப்போது ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோருடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 நிமிடங்கள் வரை முதல்வர் விஜய் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து புறப்பட்ட விஜய், நேராக பிரேமலதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முதல்வர் விஜய்யின் வருகைக்கு முன் அமைச்சர் ரமேஷ், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் முதல்வர் விஜய்யின் வருகைக்கு பின் குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+