பிரேமை பாருங்க.. ஸ்டாலின், ரஜினி, எடப்பாடி சந்திப்பு.. காவ்யா - அனிருத் திருமண வரவேற்பில் சம்பவம்!
சென்னை: சென்னையில் நடந்து வரும் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அண்மையில் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்க்கும் கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. தற்போது சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் காவ்யா மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய பிரபலங்கள் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அந்த வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளம் முதல்வர் சதீஷன், தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலினின் பெயர்த்தி தான் காவ்யா மாறன் என்பதால், அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன் நிற்கிறார். வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கிய போதே ஸ்டாலின் குடும்பத்துடன் வந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அங்கு வந்தார். அப்போது ஒரே இடத்தில் ஸ்டாலின் - ரஜினிகாந்த் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இதனால் திமுக, அதிமுக தொண்டர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஃபிரேமை பாருங்க ஜி என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமாக திருமண நிகழ்ச்சிகளில் திமுக, அதிமுகவினர் சந்தித்து கொள்வது வழக்கம் என்றாலும், தற்போதைய சந்திப்பு கூடுதல் விவாதமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
