யானையை கல்எறிந்து கோபப்படுத்திய 2 இளைஞர்கள்.. அடுத்து நேர்ந்த கதி.. இது தேவையா? பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் தேசிய புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் ஸ்கூட்டரை நிறுத்தி யானையை பார்த்ததும் அதனை நோக்கி கல் எறிந்த 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இருவரும் சிக்கிய நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

two-fined-for-stone-pelting-at-elephant-in-nagarahole-tiger-reserve

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் நாகரஹொலே தேசிய புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி வழியாக மைசூரு-வயநாடு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த 17 ம் தேதி இந்த சாலையில் 2 வாலிபர்கள் ஸ்கூட்டரில் சென்றனர். அப்போது சாலையோரம் காட்டு யானை ஒன்று வந்தது. இதனை பார்த்ததும் வாலிபர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

மாறாக ஸ்கூட்டரை சாலையில் நிறுத்திவிட்டு கல்லை எடுத்து யானையை நோக்கி எறிந்தனர். இதனால் யானை அவர்களை நோக்கி வர முயன்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது

வீடியோவை பார்த்த பலரும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அறிக்கை தாக்கல் செய்யுமாறும் வனத்துறை அதிகாரிருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து வனத்துறையினர் ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது யானையை நோக்கி கற்கள் வீசியது அனேமாலா என்ற பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், சுமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வார்னிங்குடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் இருவரும் ''இனிமேல் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம்'' என எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் இளைஞர்களின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோவில் , ''நாங்கள் வனப்பகுதியின் அருகே வசிக்கிறோம். யானைகள், மான்கள் உலா வருகின்றன. நாங்கள் ஒருபோதும் தொல்லை கொடுத்தது இல்லை. இப்போது எங்கள் இளைஞர்கள் தவறு செய்துவிட்டனர். எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் ஏழைகள். அதிகப்படியான தண்டனை வேண்டாம் என்றோம். அபராதம் விதித்துள்ளனர். இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபடமாட்டார்கள் '' என்று மன்னிப்பு கேட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+