சென்னையில் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு.. தனியாக வந்த முதல்வர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தனியாக வந்து பங்கேற்றுள்ளார். ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் வருகைக்கு பின் முதல்வர் விஜய் வந்தார். ஏற்கனவே அங்கு திமுக குடும்பத்தினர் இருந்ததால், விஜய்யின் வருகை முக்கியத்துவம் பெற்றது.

நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் சன் டிவி குழுத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். இந்த நிலையில் சென்னையில் காவ்யா மாறன் - அனிருத் ரவிச்சந்தரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Vijay

ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாலை முதலே முக்கிய அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும், ஐதராபாத் அணி நிர்வாகிகளும் வரத் தொடங்கினர். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்ப விழா என்பதால், திமுக நிர்வாகிகளும் தொடர்ந்து வந்தனர்.

அந்த வகையில் முதல்வர் விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று காவ்யா மாறன் - அனிருத் இருவரையும் வாழ்த்தி இருக்கிறார். நீல நிற ஆடை அணிந்து விஜய் தனியாக வந்தார். விஜய்யின் வருகைக்கு முன்பாக அவரின் தாயார் ஷோபா சந்திரசேகர், நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருவரையும் வாழ்த்தினர்.

அதேபோல் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். வழக்கமாக முதல்வர் விஜய் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிகளில் நடிகை திரிஷா உடனிருப்பார். இம்முறை நடிகை த்ரிஷா வரவில்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+