டேவிட் வார்னரை நம்ப மாட்டேன்.. SRH அணியில் இருந்தபோது என்ன செய்தார்னு தெரியும்.. அனிருதா ஸ்ரீகாந்த்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னரை எப்போதும் நம்ப மாட்டேன் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஐதராபாத் அணிக்காக அவர் விளையாடிய போது கடைசி சீசனில் என்ன செய்தார் என்று எனக்கு நன்றாக தெரியும் என்று கூறிய அனிருதா ஸ்ரீகாந்த், அந்த விவகாரத்தில் வார்னர் தாம் ஏதோ ஒரு பாதிக்கப்பட்டவன் போல் சித்தரித்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திலேயே ஆஸ்திரேலியா வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பேங்கிராஃப்ட் ஆகியோர் சிக்கினர். தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜாவின் புத்தகம் வெளியாகி இருக்கிறது.

David Warner

அதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அதற்கு ஓய்வறையில் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற அனைவருக்கும் அப்படி செய்யப் போகிறோம் என்பது நன்றாக தெரியும் என்று எழுதி இருக்கிறார். இதனால் மீண்டும் சாண்ட்பேப்பர் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் புயலாக வீசி வருகிறது.

இதனிடையே உஸ்மான் கவாஜாவின் கருத்துக்கு ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அவசர கதியில் விசாரணை நடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். உஸ்மான் கவாஜா கூறியது உண்மை என்றும், அதனை அனைவரும் அறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் செயல்பாடுகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஜாம்பவான் ஸ்ரீகாந்த் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களின் யூடியூப் பக்கத்தில் விவாதித்துள்ளனர்.

அதில் அனிருதா ஸ்ரீகாந்த் பேசுகையில், உஸ்மான் கவாஜாவின் கருத்துக்கு டேவிட் வார்னர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் எனக்கு டேவிட் வார்னரை பற்றி நன்றாக தெரியும்.. அவரை ஒருநாளும் நம்ப மாட்டேன். ஐதராபாத் அணிக்காக அவர் கடைசியாக ஒருமுறை விளையாடிய போது என்னென்ன விஷயங்களை செய்தார் என்பதை நன்றாக அறிவேன்.

பல்வேறு விஷயங்களை மறைத்து, தன்னை ஒரு பாதிக்கப்பட்டவனாக காண்பித்தார் என்றும் சாடியுள்ளார். டேவிட் வார்னர் கடைசியாக 2021 சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது சீசனுக்கு இடையிலேயே வார்னரின் செயல்பாடுகள் மீது ஐதராபாத் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. இதனால் அவரை அணியின் பேருந்துக்குள் கூட அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் டேவிட் வார்னரை சோசியல் மீடியாவில் கூட ஐதராபாத் அணி பிளாக் செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+