திருப்பரங்குன்றம் விவகாரம்.. இது நீதி அல்ல.. தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும்.. வன்னி அரசு கருத்து
சென்னை: திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் கால தூணில் தீபம் ஏற்றுவது என்பது மதவெறியை போதிக்கும் செயல் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கில் இதனை தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும் என்றும், இது நீதி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடைக்கால தீர்ப்பு, வழக்கின் விசாரணையை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலையில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் தீபம் ஏற்றும் பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீபம் ஏற்ற உத்தரவிட்ட போதும், காவல்துறை அதிகாரிகள் 144 தடை உத்தரவு கொண்டு வந்து யாரையும் மலை மீது அனுமதிக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தின் அனுமதி தமிழக அரசுக்கு பின்னடைவாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசு தரப்பில் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே கார்த்திகை தீபத்திற்கு இருக்கும் சூழலில், தீபம் ஏற்றப்படுமா அல்லது தமிழக அரசு பழைய நடைமுறையை பின்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் கால தூணில் தீபம் ஏற்றுவது என்பது மதவெறியை போதிக்கும் செயல். திருப்பரங்குன்றம் வழக்கில் இதனை தீர்ப்பாக மட்டுமே பார்க்க முடியும் என்றும், இது நீதி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விசிகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தீபம் ஏற்றும் போது தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விசிகவின் நிலைப்பாடு மாறவில்லை என்று சொல்லப்பட்டாலும், தீபம் ஏற்றினால் என்ன மாதிரியான விஷயங்களை விசிக முன்னெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
