2 கோடி அதிமுக தொண்டர்களில் ஒரு ஆள்தான் எஸ்.பி.வேலுமணி! அவர் பேச்சை கேட்டுட்டு.. எடப்பாடி கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர், அவர் பேச்சை கேட்டுட்டு சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: காவிரிதான் தமிழகத்தின் ஜீவநதி! காவிரி நதியின் மூலமாக டெல்டா மாவட்டங்கள், இதர மாவட்டங்களும் அதிகமாக பாசனம் பெறுகிறது. ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிப்படைந்து போச்சு, சம்பா சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது.

Edappadi palanisamy

ஏற்கெனவே முதல்வர் விஜய் ,சம்பா சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். 45 நாட்களுக்கு திறக்கப்படும் என சொல்லி திறந்தாரு! 45 நாட்களுக்கு நீரை வைத்துக் கொண்டு எப்படி சம்பா சாகுபடி செய்ய முடியும்? குறைந்தபட்சம் ஜனவரி மாதம் 3ஆவது வாரம் வரை தண்ணீர் வரவேண்டும்.

சம்பா சாகுபடி

அப்படி தண்ணீரை திறந்துவிட்டால்தான் சம்பா சாகுபடியில் முழுமையாக விளைச்சலை பெற முடியும். ஆனால் அந்த அளவுக்கு அணையில் தண்ணீர் இல்லை. இவையெல்லாம் ஒன்றுமே தெரியாத முதல்வர், மேட்டூர் அணைக்கு வந்து தண்ணீரை திறந்துவிட்டார். குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

மேட்டூரில் இருக்கும் 61 அடி தண்ணீர் என்பது குடிநீருக்கே போதாது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் எல்லாம் இனியும் மழை பொழிவு குறைவாகத்தான் இருக்கும். கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. அத்துடன் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய பங்கு நீரை தமிழக அரசு, கர்நாடகாவிடம் இருந்து பெறவில்லை.

ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இரு மாநிலங்களின் நீர்பாசனத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுக்கிறது.

சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் விஜய் சென்றிருந்தார். அப்போது கர்நாடகா முதல்வரும் அங்கு சென்றதால் அவர் நமக்கு தண்ணீர் திறந்துவிடுவதில்லை என்பதை சோனியா, ராகுலிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியிருக்க வேண்டும். நானும் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவர் எந்த கோரிக்கையையும் வைக்காமலேயே சென்னைக்கு வந்துவிட்டார்.

தமிழக மக்கள் பற்றியும் தமிழக விவசாயிகள் குறித்தும் அவர் கவலைப்படவில்லை. எங்களிடம் இருப்பது 47 எம்எல்ஏக்கள்தான்.47 பேரை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? தவெக ஆட்சி தானாகவே கவிழும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு! விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது.

மேகதாது அணை

மேகதாது பிரச்சினைக்கு வாயே திறப்பதில்லை. நிர்வாக கோளாறு! தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் அண்டை மாநிலத்திற்கு செல்கின்றன. இந்த ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்து அதனால் எந்த மாதிரியான நன்மைகளை பெற்றுள்ளார்கள்? இதனால்தான் மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே இந்த ஆட்சி தானாகவே கவிழும், யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை

2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் திமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சினை, அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மின்வெட்டு பிரச்சினையால் திமுக ஆட்சிக்கு பிரச்சினை என்றார். அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினையே இருந்ததில்லை. நமக்கு தேவைக்கு போக கூடுதல் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு அனுப்பினோம். குறிப்பாக விவசாயிகளுக்கு 2021 ஆம் ஆண்டில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுக்கப்பட்டது. விவசாயம் செழித்தது, உற்பத்தி பெருகியது, விளைவாசி குறைந்தது. திமுக ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ 11 முதல் 20 வரை வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி அந்த மின் கொள்முதலை சிடிஆர் நிர்மல் குமார் ரத்து செய்தார்.

மின்சார கொள்முதல்

பின்னர் ரூ. 37.50-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என நிர்மல் குமார் அறிவித்தார். பின்னர் ஒரு யூனிட் 40 ரூபாய் வீதம் 2100 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும் என ஒரு அறிவிப்பு கொடுத்தார். 20 ரூபாய்க்கு வாங்கியதிலேயே ஊழல் என்றால் 37.50 காசுக்கு வாங்கிய மின்சாரத்தில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்?

சசிகலா, டிடிவி தினகரன்

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் இணைக்கப்படுவார்களா என கேட்கிறீர்கள், ஒருவர் தனிக்கட்சி தொடங்கிவிட்டார், அதில் இருந்து அவர் நீக்கப்பட்டும் விட்டார் (சசிகலா). இன்னொரு தனிக்கட்சி தொடங்கி பல தேர்தல்களில் போட்டியிட்டு தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார் (டிடிவி தினகரன்).

வைகோ

திமுகவில் இருந்து வைகோ கூடத்தான் பிரிந்து போய் தனிக்கட்சி தொடங்கினார். அந்த சம்பவம் குறித்து யாராவது பேசுகிறீர்களா? அதிமுக ஒன்றிணைப்பு குறித்து வேலுமணி பேசுகிறார் என்றால் அவர் ஒரு தனிநபர், அதிமுகவில் உள்ள 2 கோடி பேரில் அவரும் ஒருவர். அவர் பேசுவதையெல்லாம் வைத்து இப்படி கேள்வி கேட்காதீங்க என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+