விஜய் ஆட்சி தானாகவே கவிழும்.. அதிமுக கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி சூசகம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.. அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவிடம் 41 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது, நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக ஆட்சி மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக கைடன்ஸ் அமைப்பில் இருந்து ஒரே நேரத்தில் ஊழியர்கள் பணி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கைடன்ஸ் அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் ஆந்திரா அரசுக்காக பணியாற்றி வருகின்றனர்.

Edappadi Palaniswami

அதேபோல் அமைச்சர் கீர்த்தனா மீதும் எடப்பாடி பழனிசாமி விமர்சனங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தவெக அரசு கையாலாகாத அரசாக உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் சக்தி இந்த அரசுக்கு இல்லை. மற்றவர்கள் மீது பழி சுமத்தி தவெக அரசு தப்பிக்க பார்க்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் வழக்கின் இடைக்கால உத்தரவு தொடர்பான கேள்விக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது. இந்த ஆண்டு தீபம் ஏற்ற அனுமதி கொடுத்துள்ளார்கள். இறுதி தீர்ப்பு வந்த பின்னரே, அடுத்து தெரியும். இந்த தீர்ப்பில் சரியா, தவறா என்று நாம் எப்படி சொல்ல முடியும். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தான் நீதிமன்றம் ஒரு அனுமதியை கொடுத்துள்ளது. இறுதி தீர்ப்பு வரட்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு, 6 மாதத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள். தவெக அரசு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதில்லை. செஞ்சி சிறுமி தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை இப்படியான சம்பவம் நடந்தது கிடையாது. 40 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை. முதல்வர் விஜய்யும் வாய் திறக்காமல் இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகமாகி இருக்கிறது. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மாதவரத்தில் 70 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி பூபாலன் என்பவர் மெத் என்ற போதைப்பொருளை தயாரிக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு தான் டிஜிபி போதைப்பொருளை கட்டுப்படுத்துவோம் என்றார். தற்போது பிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை தமிழக காவல்துறை பிடிக்கவில்லை.

மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளது. காவல்துறையும், உளவுத்துறையும் என்ன செய்து வருகிறது. போதைப்பொருள் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று வாயால் சொன்னால் போதாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்திவிட்டாலே, குற்றங்கள் குறையும்.

மாவட்ட ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார். இது நியாயமா?.. அதேபோல் அதிமுகவிடம் 41 எம்எல்ஏ-க்கள் தான் இருக்கிறார்கள். நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.. தானாக கவிழ்ந்துவிடும். தவெக ஆட்சிக்கு வந்த பின் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? அதனால் மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+