மீண்டும் அதிமுகவுக்கு ஓட்டம் பிடித்த தவெக நிர்வாகிகள்.. இசக்கி சுப்பையாவுக்கு பெரும் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். இது தவெகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையாவுக்கு சீட் வழங்க தவெகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இதன் எதிரொலியாக, கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த துர்க்கை துரை, மணிமுத்தாறு ராமையா, பிரம்மதேசம் சக்திவேல் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

Setback for TVK Esakki Subaya Ambasamudram Functionaries Return to AIADMK

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இடைத்தேர்தலில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட தயாராகி வருகிறார். இந்நிலையில், அவருக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக ஆதரிப்பது குறித்து திமுக மற்றும் அதிமுகவில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் ஒரே இடத்தில் குவிந்தால் தவெக வேட்பாளரை வீழ்த்த முடியும் என்பது திமுகவில் ஒரு தரப்பினரின் கணக்காக உள்ளது. கடந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்து தவெக வெற்றி பெற்றது.

இந்தச் சூழலில் சீமானின் செல்வாக்குடன் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் சேர்ந்தால் தவெகவுக்கு எதிராக வலுவான போட்டியை உருவாக்க முடியும் என திமுகவில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். ஆளுங்கட்சியான தவெகவின் ஆட்டத்தை டுக்க இது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட தயாராகி வரும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார். தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்த அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இசக்கி சுப்பையா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தபோது, அவரது ஆதரவாளர்கள் பலரும் அவருடனே தவெகவில் இணைந்தனர். அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர், தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, மணிமுத்தாறு முன்னாள் நகர செயலாளர் ராமையா, பிரம்மதேசம் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பி உள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இது இசக்கி சுப்பையாவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் மீண்டும் நின்று வெற்றி பெற்று அமைச்சர் ஆகும் திட்டத்தில் இருக்கும் இசக்கி சுப்பையா, அரசியல் போக்குகளால், தனது வெற்றிக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+