துலாம், விருச்சிகம், தனுசு ராசியா நீங்க.. தலைகீழாக மாறும் வாழ்க்கை.. நீண்டநாள் கனவு நனவாகும்
கார்த்திகை மாத பலன்: ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. கார்த்திகை மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் ஐப்பசியில் நீச்ச நிலைமைகளில் இருந்தன. இதனால், சில ராசிகள் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். ஐப்பசி மாதம் யார் யாருக்கு பாதிப்பு கொடுத்ததோ, பணவரவு கிடைக்காத நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமை எல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் மாறும். கார்த்திகை மாதத்தில் குருமங்கள யோகம், கேள யோகம் உருவாகிறது. அந்த வகையில், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு அற்புதமான மாதமாக இந்த மாதம் இருக்கும். நிறைய நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணம் சம்பாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. தங்கம் கைகொடுக்கக்கூடிய மாதமாக இருக்கும். உழைத்த உழைப்பிற்கு கூலி அதிகமாகக் கிடைக்கும். கெளரவம் ஏற்படும்.
புதிதாக எதைத் தொடங்கினாலும் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். வேலை போனவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் நன்றாக கைகொடுக்கும். வெற்றிகள் கிடைக்கும். போட்டியாளர்கள் ஒழியக்கூடிய தன்மை ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் புதிய திருப்புமுனை ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மன அமைதியற்ற தன்மை நீங்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். 5 ஆம் பாவத்தை குரு பார்ப்பதாலும், டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் வீட்டில் இருந்து ராகு விலகுவதால் நல்லவைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். நல்ல மாற்றங்களும், சம்பாதிக்கக்கூடிய மாதமாகவும் உங்களுக்கு அமையும். லாபம் அபரிமிதமாகக் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு மிக யோகமான அமைப்பாகும். அம்மாவின் மேல் இருந்து வந்த கோபங்கள் குறையும். தாயிடம் இருந்து அனுசரணை, ஆதரவு கிடைக்கும். வீடு கட்டுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பாதி நிலையில் இருக்கும் வீடுகளை கட்டி முடிப்பீர்கள். பிளாட் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பேச்சு மூலமாக தொழில் செய்பவர்கள், ஆசிரியர்கள், பரத நாட்டிய கலைஞர்கள், குருமார்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
வழக்கறிஞர் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெரிய நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தைரியமாக எல்லா காரியங்களையும் எடுத்துச் செய்வீர்கள். வேலை போனாலும் கவலைப்படத் தேவையில்லை. நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கினால் யோகம் உண்டு. கூட்டுத் தொழில் செய்வதற்கான அமைப்பு. வேலையில் இருந்துகொண்டே தொழிலை ஆரம்பிக்கலாம்.
வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயத்தை நம்பி செய்யலாம். ஒரே ஒரு ஆட்டோ, கார் வைத்திருப்பவர்கள் இன்னொரு வாகனத்தை வாங்கலாம். அதிர்ஷ்டம் பக்கத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். பெண்களுக்கு சிறு சிறு செலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான சொகுசு பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டில், ஏசி, மெத்தை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். காசு, பணத்திற்கு எந்தவித தடையும் இருக்காது. எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணவரவு அற்புதமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து நல்லவிதமாக பணம் வந்து சேரும். உங்களுடைய இனம், மதத்தைச் சேராத நபர்கள் மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். எல்லாவற்றிலும் முழுமையான நிறைவுகள் இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும்.
எதிர்கால லட்சியங்கள் தீர்மானமாகும். பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளால் யோகம் உண்டு. அப்பாவின் உடல்நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சொந்த ஊரில் இருக்கும் சில விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.
சொந்த ஊர் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும் காலகட்டம். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி அனைத்தும் உங்களுக்கு சாதகமான அமைப்பில் உள்ளது. பெரியளவில் சோதனைகள் கிடையாது. அடுத்தடுத்து வரக்கூடிய அமைப்பில் அஷ்டமசனி வருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.


Click it and Unblock the Notifications
