அமைச்சரை வேலையை பார்த்துட்டு போனு சொன்னேன்.. இதுல என்ன தப்பு.. பாபு ஊர்வல சம்பவம்.. வைகோ விளக்கம்
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறின. இதில் கம்யூனிஸ்ட்களை தவிர, மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்தது. மதிமக வைகோ திமுக மீதும், தவெக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மீதும் விமர்சித்து வருகிறார்கள். கொளத்தூர் எம்எல்ஏ பாபு இறுதி ஊர்வலத்தில், அமைச்சர் பார்த்திபனை வைகோ கை காட்டி மிரட்டியது சர்ச்சையானது. இதுகுறித்து வைகோ பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் மீது துரும்பு கூட விழாத வகையில் சென்றேன். நான் கொடுக்கும் பாதுகாப்பு 100 பேராலும் கொடுக்க முடியாது. முதலமைச்சருடன் நடக்கும் போது என் கையை பிடித்து இழுத்தார்கள். அமைச்சரை பார்த்து நான் கை நீட்டி பேசவில்லை. அவர் அமைச்சர் என்றே எனக்கு தெரியாது. என் கையை பிடித்து இழுத்தவரை, உன் வேலையை பார்த்துட்டு போ என கூறினேன். விஜய் மேனேஜ் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

கொள்கைக்காக கூட்டணி விலகல்
நான் யாரையும் திட்டவில்லை. நான் யாரின் கையையும் பிடித்து இழுக்கவில்லை. இது அரசியலில் தவறா. ஊடகங்கள் திமுகவுக்காக ஏஜெண்ட் வேலை பார்க்கின்றன. திராவிட இயக்கத்திற்கு பாதுகாப்பாக இருக்க திமுக கூட்டணியில் இணைந்தோம். எங்களை அவமானப்படுத்தினார்கள். திமுவுடன் இருக்கக் கூடாது என்பதை மதிமுகவின் பொதுக்குழு முடிவு செய்து, கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். கொள்கைகாக தான் கூட்டணி விட்டு வெளியே வந்தோம்.
பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்தார். கொலைக்காரரை அழைத்து வந்தது தவறு என சொல்லிவிட்டு வெளியே வந்தேன். மன்னிக்க முடியாத தப்பு என்று சொல்லி வெளியே வந்தோம். முதலமைச்சர் என்னை அண்ணன் என்று சொல்லியதால் அவரிடம் சென்றேன். இது திமுகவினருக்கு பிடிக்கவில்லை. காந்தாரி வயிறு எரிந்த மாதிரி, முதலமைச்சருடன் நடந்ததை பேசி வருகிறார்கள். திமுக குடும்பத்தினருக்கு க்ரீஸ் நாட்டிற்கு சென்று திருமணம் நடத்த வேண்டுமா.
திமுகவுக்காக பாடுபட்டவன்
ஜெயலலிதா நகை அணிந்தது குறித்து 5 ஆண்டுகள் பேசியவர்கள் அங்கு ஏன் திருமணம் நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். இதைப்பற்றி பேச திமுக தயாரா. என்னை வடிவேலுவுடன் ஒப்பிட்டது மகிழ்ச்சியே. அவரும் ஒரு தமிழர். அவருடைய நகைச்சுவையால் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. விஜயகாந்த் குறித்து அவரை தமிழ்நாடு முழுவதும் பேச வைத்தது, வேலை முடிந்தவுடன் விட்டுவிட்டார்கள். பட வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி வடிவேலை ஏமாற்றிவிட்டர்கள்..
திமுகவுக்காக பாடுபட்டவன் நான். திமுக பற்றி உங்களுக்கு தெரியாது. எனக்கு நன்றாக தெரியும். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தீர்ப்பு துரதிர்ஷ்டமானது. திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு பதில் சொல்லுவார். தூத்துக்குடி 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொடூரமான சம்பவம் செய்தவர் 3 முறை ஜாமீனில் வெளியில் வந்தார். இதெல்லாம் அவருடைய ஆட்சியில் நடைபெற்றது தான். மதிமுக என்ற கட்சியை யாரலும் கரைக்க முடியாது.
ரொம்ப புண்படுத்தறாங்க
மதிமுகவை அழிக்க கருணாநிதி முயற்சி செய்தார். எங்களை இனி யாராலும் முடியாது. மேகதாது பிரச்சனைக்கு முதலில் போராடியவன் நான். செய்தியாளர்கள் என் மனது புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கிறார்கள். அவற்றுக்கு பதில் அளிக்க முடியாது. நான் பத்திரிகையாளர்களுடன் சண்டை போட்டதாக செய்தி போட பார்க்கிறீர்கள். ஐ டோன்ட் கேர். தமிழ்நாட்டின் முதலீடு ஆந்திராவுக்கு செல்லவில்லை. முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். ஊழல் வாதிகள் யாரும் முதலமைச்சரை நெருங்க முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
