உ.பியாக மாறும் தமிழகம்? அரசியலமைப்பு விதிகளை மீறிய விழுப்புரம் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் பாபு, பூஜையை செய்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில்தான் காவல் நிலையங்களில் பூஜைகள் நடத்தப்படும். ஆனால், அறிவியல் சிந்தனைக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இப்படியா? காவல் நிலையத்தில் பூஜை செய்திருப்பது அரசியலமைப்பு விதிகளை மீறிய செயல் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை மற்றும் பிரிவு 14,15ன்படி அரசு மற்றும் காவல்துறை மதச்சார்பற்றதாக செயல்பட வேண்டும். பல்வேறு சாதி, மதங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் காவல் நிலையத்தில்.. ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குகளை மட்டும் நடத்துவது என்பது மதச்சார்பற்ற நடைமுறைக்கு எதிரானதாகும்.

Tamil Nadu Inspector

செஞ்சி சிறுமி வழக்கில் விசாரணையை தொடங்கி 40 நாட்கள் ஆகியிருக்கிறது. இன்னும் சிறுமியை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் இந்த வழக்கை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான டீம்தான் விசாரிக்க தொடங்கியது. அக்.12ம் தேதியன்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கை பதிவு செய்து சிறுமியை காவல்துறையினர் தேட தொடங்கியிருக்கின்றனர். நாட்கள்தான் நகர்ந்தன.. எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. வழக்கு கொஞ்சம் சீரியஸாகிறது.

மாவட்ட எஸ்பி தலையிட்டு தனிப்படையை அமைக்கிறார். தனிப்படையில் ஆய்வாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர். தேடுதல் தீவிரமடைகிறது. 10 நாட்களாக தேடியும் ஒரே ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுகிறது. வழக்கின் போக்கை முதலிலிருந்து ஆய்வு செய்து.. புதிய கோணங்களில் சிபிசிஐடி விசாரணையை முன்னெடுத்தது. சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்? என்கிற சந்தேகத்தில் பக்கத்தில் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர்.

தேடுதலில் சம்பந்தமே இல்லாமல் எலும்புக்கூடு கிடைக்கிறது. இது 3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சிறுமி மட்டும் கிடைக்கவேயில்லை.

இப்படி இருக்கும்போதுதான் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தனது காவல் நிலையத்தில் மனைவி மற்றும் உறவினர்களுடன் குழந்தை கிடைக்க வேண்டும் என்று பூஜை மேற்கொண்டிருக்கிறார். இப்படி செய்வது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51(A)-ன் கீழ் எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

குழந்தைகள் காணாமல் போகும்போது, எந்தெந்த கோணங்களில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். உறவினர்கள், பெற்றோர்கள், தெரிந்தவர்கள், ஆள் கடத்தல் கும்பல், போக்சோ குற்றங்கள், வழி தவறுதல், நீர்நிலைகளில் மாட்டிக்கொள்ளுதல், நரபலி போன்ற அச்சுறுத்தல் என பல கோணங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் சரியாக செய்தாலே குழந்தையை கண்டுபிடிக்க முடியும். அதை விட்டுவிட்டு.. இப்படி பூஜையெல்லாம் செய்தால் எதுவும் மாறாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+